பக்கம்:மணி பல்லவம் 3.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

578

மணிபல்லவம்


"அந்தத் தத்துவம் எல்லாம் எனக்கு விளங்காது ஐயா! கிழக்குக் கடலின் தென்பகுதியில் நாவலந்தீவுக்கே நுழைவாயில் போல் அமைந்திருக்கிறபடியால் பூம்பு காரின் வீதிகளில் பல நாட்டுக் கலைவளத்தையும், மொழி வழக்கையும் காண முடிகிறது. எங்கள் மதுரை நகரம் தமிழகத்தின் நடுநகரமாக அமைந்து விட்ட தனால் இதற்கு வாய்ப்பில்லை. மேலும் இந்திர விழாவைப் போல இவ்வளவு பெரிய விழா எதுவும் எங்கள் நகரத்தில் நடைபெறுவதில்லை. பங்குனி மாதத்தில் வில் விழா என்று ஒன்று நடைபெறும். காமனுக்காகக் கொண்டாடப்படுகிற அந்த விழாவில் மதுரை மாநகரத்து இளைஞர்களின் உற்சாகத்தை மட்டுமே காணலாம்...!" -

'காமனுக்கென்று தனியாக விழா எதற்கு மணிமார்பா? இளைஞர்களும் முதியவர்களுமாக உயிர் வாழும் மனிதர்களுடைய மனத்தில் ஆசைகள் அள வற்றுப் பொங்கும் ஒவ்வொரு விநாடியும் காமனுக் குத்தான் கொண்டாட்டம் ! காமனுக்குத்தான் திரு விழா ஆசைகளின் முடிவுதான் காமதகனம். வைராக்கியம் வாய்ந்த மனம் இருந்தால் அந்த மனதுக்கு உரியவன் எவனோ அவன் ஒவ்வொரு விநாடியும் தன் மனத்தில் மேலெழுந்து நிற்கும் ஆசையைத் தன்னுடைய வைராக்கிய நெருப்பினால் தகனம் செய்துவிட்டு வெற்றிப் பார்வை பார்க்கலாம்” என்று சிரித்தபடியே தத்துவம் சொன்னான் இளங்குமரன்.

அப்போது படைக்கலச் சாலையின் வாயிற் பக்க மிருந்து சிரிப்பும் ஆரவாரமுமாக நாலைந்து இளைஞர் களோடு கதக்கண்ணன் அங்கே வந்து சேர்ந்தான். அவர்கள் யாவரும் அருகில் வந்தபோதுதான் கதக் கண்ணனோடு உடனிருந்தவர்கள் தன்னுடைய பழைய பூம்புகார் நண்பர்கள் என்பது இளங்குமரனுக்குப் புரிந்தது. அவர்களை எப்படி வரவேற்பது என்று அவன்

& i

அப்போது திகைக்க நேர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_3.pdf/128&oldid=1144517" இலிருந்து மீள்விக்கப்பட்டது