பக்கம்:மதன கல்யாணி-1.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 119

எங்ஙனம் எனில், மைனருக்கும் மதனகோபாலனுக்கும், தோற்றத் திலும், குணத்திலும், குணங்களிலும் நடத் ம் காணப்பட்ட முழுவேற்றுமையும், தனது புதல்வியரது முகத்தோற்றத்திலும் மதனகோபாலனது முகத் தோற்றத்திலும் தோன்றிய ஒற்றுமை யுமோ அவளது மனத்தை முற்றிலும் இளக்கி விட்டதன்றி, அவள் ஒவ்வொரு நாளும் தவறாமல் அவனை உற்று நோக்கி நோக்கி அதே விஷயத்தில் தனது மனத்தையும் நினைவையும் செலுத்தி வந்தாள் ஆதலின், அது படிப்படியாக அவளைப் புதுமனுவியாக மாற்றிவிட்டது. சிலரது மனம் எதைக் கண்டும் இளகாத கற்பாறை யாக இருக்கும். ஆனால், அது எதையாகிலும் கண்டு இளகிவிடும். நமது கல்யாணியம் மாளது மனதும் அப்படிப்பட்டதே ஆகையால், அத்தனை வருஷ காலமாக வெளியில் தெரியாமல் அவளது மனதில் மறைந்து கிடந்த அன்பானது ஊறி ஊறிப் பெருகி அணை பெயர்த்து விடப்பட்ட எழு கடல்கள் போலப் பொங்கி வெள்ளமாக வழிந்தோடத் தலைப்பட்டதும், அவள் உருக்கமான பார்வை களாலும், தேன் போல இனித்த குளிர்ந்த மொழிகளாலும் த்னது மனநிலைமையை மதனகோபாலனிடம் வெளியிட்டு வந்தாள். ஒவ்வொரு நாளும் அவனைக் கண்டு அவனோடு ஒரு வார்த்தை யாகிலும் பேசாவிடில் அவளது மனம் அமைதி அடையாது; அவன் வரும் வரையில், பொழுது போவது அவளுக்கு மகா வாதையாக இருக்கும். அவன் வந்துவிடுவானாகில், அந்தப் பொல்லாத பொழுதானது அதிசீக்கிரமாகப் போய்விடுவதாக அவளுக்குத் தோன்றும்; ஒவ்வொரு நாளிலும் அவன் வரும் சமயத்துக்கு நாலைந்து நாழிகைகளுக்கு முன்னிருந்தே அவளது மனம் ஆவலினாலும் ஆசையினாலும் துடித்துக் கொண்டிருக்கும்; தேகம் கட்டிலடங்காமல் தத்தளித்திருக்கும். அவள் நல்ல இளமையும் செழுமையும் பெற்ற மேனியினள் ஆகையாலும், சிறு வயதிலேயே விதவையானது பற்றி தேகம் கட்டுத்தளராமலும் சீர் குலையாமலும் இருந்தமையாலும் அவளது மனதில் தோன்றிய இன்பமோ துன்பமோ அதிக உக்கிரமானதாகவும், அவளால் சகிக்க ஒண்ணாத வலிமை உடையதாகவும் அபாரமாகப் பெருகித் தோன்றியது. அவளிடம் மைனர் துடுக்காகவும் மரியாதைக் குறைவாகவும் நடக்க நடக்க, அவள் மதனகோபாலனிடத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/137&oldid=647043" இலிருந்து மீள்விக்கப்பட்டது