பக்கம்:மதன கல்யாணி-1.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 12:

சந்தேகம் உண்டாகிவிட்டது. மூவருக்கும் உரோமம் சிலிர்த்தது. ஒவ்வோர் அங்கமும் ஆனந்தத் தாண்டவமாடியது. மூவரும் பிரம்மாநந்த சுகத்தில் மிதந்து தத்தளித்துக் குடிவெறியால் மயங்கி கிடப்போர் போல அப்படியப்படியே சொக்கிப் போயிருந்தனர். அம்மூவரில் கல்யாணியம்மாளது நிலைமையே கட்டிலடங்காத தாகப் போய்விட்டது. அவளது செவிகளில் கொள்ளை கொள்ளை யாக வந்து மோதி அவளது தேகத்தின் ஒவ்வோர் அணுவையும் பம்பரம் போலச் சுழற்றி, இன்பசாகரத்தில் ஆழ்த்திய மகா சிரேஷ்டமான அந்த இன்னொலி சகிக்க ஒண்ணாத பரம இன்ப மாய்ப் போகவே, அவள் மெல்ல எழுந்து திரையின் மறைவில் இருந்த ஒரு வாசற்படியின் வழியாகத் தனது அந்தப்புரத்திற்குப் போய்விட்டாள்; மதன கோபாலனோ அந்தக் கீர்த்தனையின் பல்லவி, அநுபல்லவி, சரணம் முதலியவற்றைத் தானும் அனுப்வித்தபடி மிகவும் பிரம்மாநந்தமாகப் பாடி முடித்த பின், தன்னிடம் இருந்த வீணையைப் பெண்களிடம் கொடுத்து விட்டு, அந்தக் கீர்த்தனையின் பல்லவியைப் பாடும் விதத்தை இருவருக்கும் மாறி மாறிப் பயிற்றுவிக்கத் தொடங்கினான். அப்பெண்களது நினைவு முற்றிலும் அந்தப் பாடலிலேயே சென்றிருந்தது ஆகையால், அவர்கள் தங்களது தாய் எழுந்து போனதை கவனிக்க வில்லை. மதனகோபாலன்; உள்ளே நுழைவது முதல், வெளியில் போகிறது வரையில், தனது சிரத்தை நிமிர்த்து, எந்தப் பக்கத்தையும் பார்ப்பதே என்றைக்கும் வழக்கமில்லை ஆதலால், அப்போதும் கல்யாணியம்மாள் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறாள் என்றே அவன் நினைத்திருந்தான். இடை நடுவில் அவள் எழுந்து போனது, அதுவே முதல்தடவை ஆதலால் புதல்வியரும் அதைப் பற்றி சிறிதும் சந்தேகியாமல், தங்களது அன்னை திரையின் மறைவில் இருப்பதாகவே எண்ணி இருந்தனர். அவ்வாறே அவர்களது அன்றைய சங்கீதப் பயிற்சி மாலை ஏழுமணி நேரம் வரையில் நடைபெற்று முடிவடைந்தது.

அப்போது, தான் போவதாக அந்த மடந்தையரிடம் சொல்லிக் கொண்டு எழுந்த மதனகோபாலன், வழக்கம் போல கல்யாணி யம்மாளிடத்திலும் செலவு பெற்றுக் கொள்ளும் பொருட்டு நிமிர்ந்து திரைப்பக்கம் பார்க்கவே, அவள் போய்விட்டாள் என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/139&oldid=647046" இலிருந்து மீள்விக்கப்பட்டது