பக்கம்:மதன கல்யாணி-1.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j 30 மதன கல்யாணி

உட்கார்ந்து என்னோடு சந்தோஷமாகப் பேசி விட்டுப் போகலாம். உட்கார்ந்து கொள்” என்று மிக மிக உருக்கமாகக் கூறிய வண்ணம், அவனிடத்தில் நெருங்கி வந்தாள்.

அவளது சொல்லைக் கேட்ட மதனகோபாலன் என்ன செய்வது என்பதைத் தீர்மானிக்க மாட்டாமல் தவித்தவனாய் பலவாறு எண்ணமிடலானான். அன்றைய பகலில் மீனாவியம்மாளது பங்களாவில் தனக்கு நேர்ந்த தீங்கைப்பற்றிய நினைவு அப்போதும் தோன்றியது. தான் எவ்விதமான குற்றமும் செய்யாதிருக்க, தனக்கு அநியாயமாக அவமானமும் தண்டனையும் ஏற்பட்டதைக் கருதி, பெரிய மனிதரது வீடுகளில் பழகுவது கத்தி முனையோடு பழகுவதைப் போன்றது என்றும், ஆதலால், தான் கல்யாணி யம்மாளிடத்தில் அந்த ஏகாந்தமான இடத்தில் இருந்து பேசுவதால் ஏதேனும் பெருந்துன்பம் சம்பவிக்கலாம் என்றும் நினைத்தவனாய், மதனகோபாலன் மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலைப் பெரிதும் கொண்டவனாய் இருந்தான். கல்யாணியம்மாளது விருப்பப்படி உட்கார்ந்து கொள்வதனாலும் துன்பம் ஏற்படக்கூடியதாகத் தோன்றியது; அவளது விருப்பத்துக்கு மாறாகத் தான் உடனே போக வேண்டும் என்று வற்புறுத்திக் கூறிவிட்டுப் போவதனாலும் விபத்து ஏற்பட வழி இருந்தது. தவிர, அன்றைய பகல் வரையில் மதனகோபாலன் மாரமங்கலம் ஜெமீந்தாரது குடும்பத்து ஜனங்களைப் பற்றி மிகவும் நல்ல அபிப்பிராயம் கொண்டிருந்தான். அன்று கண்மணியம்மாள் வெளியிட்ட விஷயங்களைக் கேட்ட பிறகு கல்யாணியம்மாள், மைனர், துரைஸானியம்மாள், கோமளவல்லி ஆகிய நால்வரைப் பற்றியும் அவன் கொண்டிருந்த அபிப்பிராயம் முற்றிலும் மாறுபட்டுப் போனது அவர்கள் துன்மார்க்கத்தில் செல்பவர்கள் என்ற எண்ணமும், அவர்களிடம் தான் நிரம்பவும் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும் என்ற நினைவும், அவர்களுக்கு வினை கற்றுக் கொடுக்கும் அலுவலில் இருந்தே தான் அதிசீக்கிரத்தில் விலகிக் கொள்ள வேண்டும் என்னும் உறுதியும் அவனது மனதில் உண்டாகி விட்டன. அப்படிப்பட்ட நிலைமையில், தான் தவறுதலாக அந்த அந்தப்புரத்திற்குள் வந்து விட்டதைப் பற்றியே அவன் ப்ரம்சங்கடம் அடைந்திருந்தவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/148&oldid=649587" இலிருந்து மீள்விக்கப்பட்டது