பக்கம்:மதன கல்யாணி-1.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 135

நாழிகையாவது இங்கே உட்கார்ந்து என்னோடு சந்தோஷமாகப் பேசிவிட்டுப் போகாவிட்டால், என் மனம் அமைதிப்படாது. நான் இன்று இரவு முழுதும் துங்கவே போகிறதில்லை. நீ நிற்காதே; முதலில் வந்து உட்கார்ந்துகொள்; கண்மணி!” என்று மகா உருக்கமாகவும் மெய்மறந்த துணிவோடும் கூறிய வண்ணம், கல்யாணியம்மாள் புன்னகையும் மகிழ்ச்சியும் பிரகாசித்த முகத்தினளாய், அவனிடம் நெருங்கி அவனது கரத்தைப் பிடித்து அவனை மெல்ல இழுத்து வந்து சோபாவில் உட்கார வைத்தாள். அவளது அபூர்வமான சொற்களைக் கேட்ட மதன கோபாலன் நிலைகலங்கி, அது உண்மையோ கனவோ என்று மதிமயங்கி மருண்டு நின்ற சமயத்தில் அவள் தனது கரத்தைப் பற்றி இழுக்கவே, அவன் தனது நல்லுணர்வையும் பஞ்சேந்திரி யங்களையும் நம்பாமல் வியப்பும் திக்பிரமையும் கொண்டு இரண் - டொரு நிமிஷம் வாய் பேசா ஊமை போல அவளோடு கூடவே சோபா வரையில் நடந்தான் ஆனாலும், அதன் மீது உட்காராமல், அதன் மரச்சட்டத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டு நின்றான்.

அதற்குள் அவனது நல்ல உணர்வு திரும்பியது; தான் பெருத்த அபாயகரமான நிலைமையில் இருந்ததாக அவன் நினைத்து விட்டான். மீனாகூஜியம்மாளது பங்களாவில் நேர்ந்த துன்பத்தைக் காட்டிலும், இது ஆயிரம் மடங்கு பெருத்த விபத்தாகத் தோன்றி யது. அவளது சொற்களும் தோற்றமும் அன்னிய மனிதனான தன்னை அவள் நாணமின்றித் தொட்டு இழுத்ததும் அவனுக்கு ஒரே விஷயத்தை உறுதிப்படுத்தின. அவள் தன்மீது மோகங் கொண்டு தனது சிற்றின்ப சுகத்தை நாடுகிறாள் என்ற எண்ணம் மதனகோபாலனது மனதில் பட்டது. கண்மணியம்மாள் அன்றைய பகலில் சொன்னதற்கு அனுசரணையாகவே, கல்யாணி யம்மாளது நடத்தையும் இருந்ததைக் காணவே, அவன் ‘சே’ இவர்கள் மிகவும் கேவலமான நடத்தை உடையவர்கள். நாளை முதல் இவர்களுடைய முகத்தில் விழிக்கவே கூடாது. இந்தக் கண்டத்துக்கு நான் எப்படியாவது தப்பித்துக் கொண்டு போய்விட் வேண்டும். ஈசுவரா நீ தான் இந்தச் சமயத்தில் வந்து எனக்கு ஒரு துன்பமும் இல்லாமல் என்னைக் காப்பாற்ற வேண்டும்” என்று எண்ணமிட்டவனாய், பெரிதும் கலக்கமும் குழப்பமும் அடைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/153&oldid=649593" இலிருந்து மீள்விக்கப்பட்டது