பக்கம்:மதன கல்யாணி-1.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 453

ஜனிக்குமானால் அவைகள் ஒவ்வொன்றுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் ஒப்புக் கொள்ளுகிறேன்.

இன்னும் பத்து நாட்களுக்குள் இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கு நீ கேட்கும் ஆபரணங்களை வாங்கித் தரக் கடமைப்பட்டவனாக இருக்கிறேன். தவிர, என்னுடைய மைனர் பருவம் நீங்கி, நான் சமஸ்தானத்தை ஒப்புக்கொள்ளும் தினத்தன்று, உனக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கு ஆபரணங்கள் தரித்து சமஸ்தானத்து அரண்மனையில் பட்டமகிஷியின் ஸ்தானத்தில் கொண்டு போய் உன்னை வைத்துக் கொள்ள இதன் மூலமாக நான் கட்டுப்படு கிறேன். இந்த நிபந்தனைகளில் எதையாகிலும் நான் செய்யத் தவறுவேனாகில், நீ சிவில் கிரிமினல் முதலிய நியாயஸ்தலங்களின் உதவியைக் கொண்டு இந்த நிபந்தனைகளை நிறைவேற்றிக் கொள்ள உனக்கு இதன் மூலமாக அதிகாரம் உண்டாக்கிக் கொடுக்கிறேன். இந்தப் பத்திரம், சட்டப்படி, விவாகத்துக்கு சமதையாக ஆகாதென்று கோர்ட்டார் தீர்மானித்தாலும், அல்லது, நான் இதற்கு மாறாக அக்கினி சாட்சியாக இன்னொரு பெண்ணைக் கலியாணம் செய்து கொண்டாலும், அது வரையில் உன்னுடைய கற்பை அழித்ததற்காக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கொடுக்க இதன் மூலமாக நான் கட்டுப்படுகிறேன். இந்தப் பத்திரத்தை திரிகரண சுத்தியாக நான் நல்ல அறிவோடிருக்கையில் என் மனப் பூர்வமாக எழுதிக் கொடுத்திருக்கிறேன்.

இப்படிக்கு எழுதியதுள்பட மாரமங்கலம் மைனர் - துரை

என்று பாலாம்பாள் சொல்லிக் கொண்டே போனபடி மைனர் பத்தி ரத்தை எழுதி அதன் அடியில் தனது கையெழுத்திட்டு, அதை மடித்து, அவளிடம் நீட்டி, “இதோ இருக்கிறது பத்திரம்; இவ்வளவு தானே உனக்கு வேண்டியது? இனிமேல் கவலையில்லையே?” என்று கேட்க, பாலாம்பாள் மிகவும் மகிழ்ச்சியாகவும் குதுகல மாகவும் வசீகரமாகவும் நகைத்த வண்ணம் பத்திரத்தை அலட்சிய மாக வாங்கிக் கொண்டவளாய், “தாங்கள் சொல்வது வேடிக்கை யாக இருக்கிறதே என்னை இந்த் காகிதத்தோடு விட்டுவிடுவீர்கள் போலிருக்கிறதே; நான் கேட்பது தாங்கள் என்னைக் கைவிடாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/171&oldid=649613" இலிருந்து மீள்விக்கப்பட்டது