பக்கம்:மதன கல்யாணி-1.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 159

சாத்தியம் இல்லாததாய் இருந்தது. மற்றொன்றோ, அதிர்ஷ்டவச மாக, அவர்கள் கதவண்டை இழுத்துவைத்த கட்டிலிற்கு மேலே, ஒரு பக்கத்தில் சிறிது விலகினாற் போல இருந்தது. அந்தக் கட்டிலின் மேல் போடப்பட்டிருந்த மேஜைகள் சோபாக்கள் முதலியவற்றின் மேல் ஒரு மனிதன் ஏறி கொசுவலைச் சட்டத்தில் நின்று கொண்டு அந்தக் கண்ணாடியை உடைத்து விடலாம் என்பது தோன்றியது. அப்படி அதை மைனர் உடைத்து வழி செய்த பிறகு, இருவரும் கட்டிலில் இருந்த சாமான்களின் மேல் ஏறுவதென்றும், மைனர் பாலாம்பாளை முதலில் தூக்கி துவாரத்தின் வழியாக மேலே ஏற்றி விடுவதென்றும், அதன் பிறகு அவன் தொற்றி ஏறிப் போய் விடுவதென்றும் அவர்கள் முடிவு செய்து கொண்டனர். மைனரது தேகம் வெடவெட வென்று நடுங்கிக் கொண்டிருந்த அந்த நிலைமையில், அவன் எவ்வித முயற்சியும் செய்ய வல்லமையற்றவனாய் இருந்தான் ஆனாலும், திருடர்களிடம் அகப்பட்டு எவ்விதமான துன்பங்களுக்கு ஆளாக வேண்டுமோ என்கிற பேரச்சத்தினால் தூண்டப் பட்டவனாய், அவன் பக்கத்தில் கிடந்த பால் குடிக்கும் வெண்கலக் குவளையைக் கையில் எடுத்துக் கொண்டு கட்டிலின் மேல் பாய்ந்து, தாறுமாறாக நிரப்பப்பட்டுக் கிடந்த சோபாக்கள் நாற்காலிகள் மேஜைகள் முதலியவற்றின் மேல் காலை வைத்து ஏறுகிறான். கால்கள் வெடவெடவென்று நடுங்குவதால், அவை வைக்கப்படும் இடத்தில் எல்லாம் தவறிப்போவதனால் இரண்டு மூன்று முறை அவன் கீழே விழுந்து, காலிகளிலும் கைகளிலும் தேகத்திலும் பல இடங்களில் பித்தளைக் கட்டிலில் மோத, பெருத்த காயங்கள் பெற்றான்; பல இடங்களில் இருந்து இரத்தம் வழிந்தோடுகிறது. உச்சி முதல் உள்ளங்கால் வரையில் வியர்வை வெள்ளமாக வழிகிறது; தேகம் நெருப்பாய்ப் பற்றி எரிகிறது; அந்த நிலைமையில் மைனர் மிகவும் பாடுபட்டு, கட்டிலின் சாமான்களின் மீதேறி, நிமிர்ந்து நின்று சிறிது தூரத்திற்கு அப்பால் இருந்த கண்ணாடிப் பக்கமாக வளைந்து, இடது கரத்தால் கண்ணாடிக்குக் கீழே இருந்த மேல்மச்சின் குடைவைத் தாங்கிக் கொண்டு வலக்கரத்தில் இருந்த பாத்திரத்தால் கண்ணாடியை உடைத்துக் கொண்டிருந்தான். அந்தக் கண்ணாடி இரண்டு விரல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/177&oldid=649619" இலிருந்து மீள்விக்கப்பட்டது