பக்கம்:மதன கல்யாணி-1.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#62 மதன கல்யாணி

தலைவருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பி, தான் வேறொருவரை மணந்து கொண்டிபடியால், அவருக்கும் தனக்கும் இனி எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும், தான் இனி நாடகத் தொழிலை விட்டுவிட்டதாகவும் தெரிவித்துவிட நினைத்திருந்தாள் ஆதலால், அவருக்கும் டெலிபோன் மூலமாகச் செய்தி சொல்லியனுப்ப வேண்டும் என்று அவள் நினைக்கவில்லை. ஆனால் இப்போது தப்புவதற்கு வேறுவழி இல்லாமற் போகவே, உடனே புரசைப் பாக்கத்தில் இருந்த நாடகத் தலைவரது இலக்கத்தை டெலிபோனில் கோர்க்கும்படி செய்து அதன் மூலமாகக் கிழவரை எழுப்பித் தனது பங்களாவிற்குள் திருடர்கள் வந்திருப்பதாகவும், உடனே வந்து சேரும்படியாகவும் அவரிடம் தெரிவித்தாள். அவள் பேசி முடித்த போதுதான் கள்வர் சாமான்களின் மீது வீழ்ந்து தட்டுத்தடுமாறி உள்ளே நுழைந்தனர். அதற்கு மேலும் தான் பேசுவதும் தவறென்று நினைத்த பாலாம்பாள், ஒரு மூலையில் தொங்கிக் கொண்டிருந்த படுதாவின் மடிப்புகளுக்குள் நுழைந்து மறைந்து நின்றாள். உட்புறத்தில் நுழைந்த திருடர் எங்கும் இருளாய் இருந்ததைக் கண்டு, தங்களது கையில் இருந்த நெருப்புப் பெட்டியினின்று ஒரு குச்சியை எடுத்துக் கிழித்து நாற்புறங் களையும் நோக்கி, சுவரில் கண்ணாடி விளக்கிருக்கக் கண்டு, அதனிடம் சென்று, இன்னொரு குச்சியைக் கிழித்து, விளக்கைக் கொளுத்திக் கொள்ளவே, திரும்பவும் பளிச்சென்ற பிரகாசம் அறையில் நிறைந்தது. அங்கிருந்த ஒவ்வொரு பொருளும் உடனே நன்றாகத் தெரிந்தது. ஆனால் மனிதர் எவரும் காணப்படாததைக் கண்ட திருடர் வியப்புற்றனர்; தாங்கள் வந்ததை உணர்ந்து உட்புறத்தில் இருந்தோர் சாமான்களைப் புரட்டிய ஓசையைக் கேட்டவர்கள் ஆதலால், உள்ளே இருந்த மனிதர் வேறே வழியாக வெளியிற் போயிருப்பாரோ என்ற சந்தேகம் அவர்களது மனத்தில் உதித்தது. அந்த அறையிலிருந்து வெளியில் போவதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா என்று திருடர்கள் ஆராய்ந்து பார்த்தனர். எவ்வித மான வாசலும் காணப்படவில்லை. ஒரு மூலையில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த படுதாவின் சுருளானது அசைவதாக உணர்ந்த கட்டையன் குறவன், மெல்ல அந்தப் படுதாவண்டையில் போய்த் தனது கட்டாரியால் அதைத் தள்ளிவிட, அதற்குள் நடுநடுங்கிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/180&oldid=649623" இலிருந்து மீள்விக்கப்பட்டது