பக்கம்:மதன கல்யாணி-1.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 மதன கல்யாணி

முடியாத ரெளத்திராகாரமான கோபம் பொங்கி எழுந்துவிட்டது. அடாடா! நான் மாத்திரம் கொஞ்சம் மரியாதை பார்க்காதிருந்தால், என்ன செய்திருப்பேன் தெரியுமா? அவன் எட்டுக் குட்டிக்கரணம் போடும்படி, அவனை அந்தக் காலாலேயே உதைத்திருப்பேன். அவன் மகா கெட்டவன் ஆனாலும், ஆண்பிள்ளை ஆயிற்றே: நாம் கேவலம் விதவை ஜென்மமாயிற்றே என்று நினைத்து என்னுடைய பதப்பை எல்லாம் அடக்கிக் கொண்டேன்” என்று கூறிச் சிறிது நேரம் நிறுத்தினாள்.

அந்த வரலாற்றைக் கேட்ட மீனாகூஜியம்மாள் சகிக்க இயலாத வியப்பும் திகைப்பும் அடைந்து, “ஆ என்ன ஆச்சரியம்! நான் பிறந்தது முதல் இப்படிப்பட்ட அதிசயத்தை என் காதாலும் கேட்டதே இல்லை. அடாடா அந்த மனிதனுடைய உண்மை யான யோக்கியதை இப்படிப்பட்ட தென்பதை அறிந்து கொள்ளா மல், அவனை நம்முடைய பெண் குழந்தைகளுக்குப் பாடம் கற்றுக் கொடுக்க வைத்திருந்தோமே! என்ன காரியம் செய்து விட்டோம்” என்று பரமசங்கடம் அடைந்தவளாகக் கூறினாள்.

கல்யாணியம்மாள் மிகுந்த விசனத்தோடு, “ஆம் ஆம்! நேற்றிரவு முழுதும் நானும் அதைப்பற்றியே நினைத்து நினைத்து நிரம்பவும் சங்கடப்பட்டேன். ஆனால் அவன் என்னுடைய பங்களாவில் ஒன்றையும் அறியாத குழந்தைகளிடத்தில் போய் இப்படிப்பட்ட காரியம் செய்யாமல், என்னிடத்தில் வந்து இப்படி நடந்து கொண்டானே அதுவே எனக்கு ஒர் ஆறுதலாக இருந்தது. அவன் போகும் ஒவ்வோரிடத்திலும் இப்படித்தான் செய்வான் போலிருக் கிறது. அவன் இன்னும் யார் யார் இடத்தில் இப்படிப் பிதற்றி மரியாதை பெற்றுக் கொண்டு வந்திருக்கிறானோ தெரியவில்லை. (கண்மணியை நோக்கி) கண்மணியம்மா! அவன் நேற்று இங்கே வந்திருந்த போது, அவனுடைய குடிவெறியில் நல்ல வேளையாக உன்னிடத்தில் ஒன்றும் விஷமம் செய்யாமல் போனானே! அதுவும் நல்ல காலந்தான்” என்றாள்.

அப்போது கண்மணியம்மாள் நரக வேதனை அடைந்து கொண் டிருந்தாள் என்று சொல்வது குறைவாகக் கூறியதாகும். அவள் அனுபவித்த எண்ணிறந்த வேதனைகளைக் காட்டிலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/212&oldid=649657" இலிருந்து மீள்விக்கப்பட்டது