பக்கம்:மதன கல்யாணி-1.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 மதன கல்யாணி

அதற்கு மாறாக நீயும் நானும் சொன்னால், அதை யார் நம்புவார்கள். இதனால் ஒரு சங்கதி நிச்சயமாகிறது. அவன் வீணை கற்றுக் கொடுக்கப் போன வீடுகளில் உள்ள எல்லாப் பெண்டு களிலும், நீயும் நானுமே அழகில்லாத ரூபிகளாகையால், அவனுடைய கிருபா நோக்கமும் அருளும் நமக்கில்லாமல் போய்விட்டன என்று நான் துணிந்து சொல்லுவேன்; இதில் நமக்கு இன்னொரு துரதிர்ஷ்டம் பார்த்தாயா? நேற்று அவன் வீணை கற்றுக் கொடுத்த போது, அவனுக்கருகில் நானே முன்னால் உட்கார்ந்திருந்தேன் அல்லவா. அவன் ஒரு குடக் கள்ளைக் குடித்துவிட்டு வந்திருந்தும், அதில் ஒரு துளிக் கள்ளாவது வாசனையாவது எனக்காவது எனக்குப் பக்கத்தில் இருந்த உனக்காவது கிடைக்கவில்லையே! அவன் எழுந்து என்னிடம் சொல்லிக் கொண்டு போன போது அவன் முன்னிலும் அதிக சமீபத்தில் நெருங்கி வந்து பேசினான். அப்போதும், அந்த பாக்கியம் நமக்குக் கிடைக்கவில்லை. அவன் வயிற்றிற்குள் ஒரு குடக் கள்ளை மறைத்து வைத்திருந்து மற்றவருடைய கண்ணுக்கு மாத்திரம் தெரிந்திருக்கிறது பார்த்தாயா! என்னவோ அந்தப் பையனுக்கு நேற்றைய தினம் பொல்லாத நாள் போலிருக்கிறது. இல்லாவிட்டால், இத்தனை பெரிய மனிதர்களுடைய கோபமும், பகைமையும் ஒரே காலத்தில் அவன் மேல் விழ நியாயமில்லை அல்லவா. ஆணிலும் சரி, பெண்ணிலும் சரி, அழகு அதிகமாக இருந்தால் அவர்களுடைய பாடு துன்பந்தான்” என்று புரளி யாகவும் குத்தலாகவும் வேடிக்கையாகவும் அடங்கிய விசனத் தோடும் கூறினாள். அந்த வார்த்தைகள் கல்யாணியம்மாளது இருதயத்தில், மிகவும் கூர்மையான அம்புகள் போலப் பாய்ந்து அறுக்கத் தொடங்கின. அவள் மிகுந்த வெட்கம் அடைந்தாள் என்பதை அவளது வதனம் சடேரென்று காண்பித்தது; ஆனால், அவள் அதை உடனே மறைத்துக் கொள்ள முயன்று, வேறு எதையோ கவனிப்பவள் போல அப்பால் திரும்பினாள்; அதற்கு என்ன மறுமொழி சொல்வதென்பதை அறியாதவளாய் கல்யாணி யம்மாள் தத்தளித்தவளாய், தனது மூத்த புதல்வி எந்த விஷயத்திலும் உண்மையை அதிநுட்பமாக கிரகித்துக் கொள்வதில் அபார வல்லமை வாய்ந்தவள் என்பதை அவள் நாளடைவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/230&oldid=649690" இலிருந்து மீள்விக்கப்பட்டது