பக்கம்:மதன கல்யாணி-1.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 221

நாலஞ்சு திருடரு எங்க ஆட்டே வளச்சுக்கினாங்க எல்லாரெங் காட்டியும் பெரிய திருடன் கத்தியெ உருவி கையிலே புடிச்சுக்கினு ஒரே வெட்டா வெட்டறதுன்னு உள்ளற நொளஞ்சுட்டான். நானும் துணிஞ்சு உள்ளற நொளஞ்சி அந்தத் திருடனெக் கெஞ்சா தெல்லாம் கெஞ்சி, பையனை தொடவானாமுன்னு அவனோடே காலைக் கெட்டியாய்ப் புடிச்சுக்கினு, அவனெ மொள்ள வெளியே இட்டாந்து எங்க ஊட்டுக்குப் பக்கத்துலே தென்னந் தோப்புலே நிறுத்திக்கினு “பையனெ வெட்ட வானாம்; அவங்கிட்ட இருக்கிற சொத்தை எல்லாம் வாங்கித் தந்துட்றேன்” இன்னு கெஞ்சா தெல்லாம் கெஞ்ச, அவன் சரிதான்னு ஒப்பிக்கினான். உடனே நான் உள்ளற நொளஞ்சு பார்க்கறேன்; பையனைக் காணும். அவன் எப்படியோ தப்பிச்சு மாயமா மறஞ்சு ஒடிப்புட்டான். எனக்கு நடுக்கம் எடுத்துக்கிச்சு; ஒடனே ஆடுமுளுதும் தேடிப் பாத்தா, பையன் ஒடியே பூட்டான். ஒடனே அந்தத் திருடன் என்ன சேஞ்சான்? எங்கிட்ட வந்து என்னோடெ கொரவளெயெக்


கெட்டியா புடிச்சுகினான். ஒன்னோடே கைவரிசெயெ எங்கிட்டவா காட்டறே? இப்ப பையனெக் கொண்டாறியா இல்லா மெப் போனா ஒரே வெட்டுலே ஒன்னோடே ஊட்டியே அறுத்துப் புடுவேன். அந்தப் பையன் இதோடெ உட்டுடு வேன்னு ரோசனை பண்ணாதே. அவன் மாரமங்கலம் செமீந்தாரு வூட்டுப் பையன். இன்னக்கி இல்லாமெப் போனாலும், நாளைக் குள்ளற அவனெக் கண்டுபுடிச்சி அவன் இன்னெக்கி ஏமாத்தின சொத்தெப் புடுங்கிக்கினு அவனெ ஆடறுக்கறாப்பலே அறுத்துப் போட்டுட்றேன்” இன்னு பயமுறுத்தினான். அந்தப் பையன் ஒன்னோடே மவனின்னு சொன்ன ஒடனே எனக்கு நடுக்கம் உண்டாயிடிச்சு; ஏன்னுன்னா? அந்தத் திருடன் மொரட்டு ராக்கசன். அவன் மனசு வச்சான்னா, இந்திரன் சந்தரனாயிருந் தாலும், கொன்னே போட்டுடுவான். அன்னியாயமா அவன் ஒம்மவனே கொன்னு போட்டுட்டான்னா, அப்பறம் ஒனக்கு ஒண்ணுமில்லாமெ பூடுமேன்னு எனக்கு பயம் வந்திடுச்சு ஒடனே என்னா செஞ்சேன் தெரியுமா? அவன் காலுலே வுளுந்து கெட்டியாப் புடிச்சுக்கினு “அப்பா ஒனக்கு எம்பிட்டுப் பணம் ஒனுமானாலும் சொல்லு: நாளெராத்திரி அவுங்க அம்மாக்கிட்டப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/239&oldid=649706" இலிருந்து மீள்விக்கப்பட்டது