பக்கம்:மதன கல்யாணி-1.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 227

நான் வாசற்படிக்கு அப்புறத்தில் நின்று கொண்டிருக்கிறேன், நீங்கள் சீக்கிரமாக சாப்பிட்டுவிட்டு வாருங்கள். எனக்காக அவசரப் பட்டு, சாப்பாட்டை குறைத்துவிட வேண்டாம்” என்று மிகுந்த கிலேசத்தோடு கூறிய வண்ணம் வாசற் படியை நோக்கி இரண்டோர் அடி நடந்தார் ஆனாலும், அவரது சரீரமும் முக ஜாடையும் பதைபதைத்து மிகுந்த அவசரத்தைக் காட்டின.

அவரது நிலைமையைக் கண்ட கல்யாணியம்மா, அதன் காரணம் என்ன என்பதை யூகித்துக் கொள்ள மாட்டாமல், மிகுந்த திகில் கொண்டவளாய்ப் பெரிது பெரிதாக இரண்டு மூன்று கவளங்களை எடுத்து உள்ளே செலுத்த முயல, அது உள்ளே நுழைய மாட்டாமையால்; அவளது விழி பிதுங்குவது போல ஆகிவிட்டது; விக்கல் எடுத்தது, அவள் தனது வாயில் போட்ட கவளத்தைக் கீழே உமிழ்ந்து விட்டுத் தண்ணிர் அருந்தினாள். தான் அரை நாழிகைக்கு முன் அவரது ஜாகைக்குப் போய்வந்திருக்க, அவர் அதற்குள் அவசரமாக வந்ததிலிருந்தும், என்றைக்கும் இல்லாமல் அன்றைய தினம் அவர் போஜன மாளிகைக்கே வந்ததும் அவளது மனதில் பெருத்த வியப்பையும், திகைப்பை யும் உண்டாக்கியதன்றி, தனக்கு ஏதோ பெருத்த துன்பம் வந்திருப்பது பற்றி அவர் அவ்வளவு தூரம் பதைக்கிறார் என்ற நினைவும் அச்சமும் தோன்றின; அதற்கு மேல், அவளுக்கு சாப்பாட்டிலேயே புத்தி செல்லவில்லை. அவள் உடனே தனது கையை உதறிவிட்டு, “சரி; எனக்குப் போதும்; நான் முன்னால் போகிறேன்; நீங்கள் சரியாக சாப்பிட்டுவிட்டு நிதானமாக வாருங்கள்” என்று கூறிய வண்ணம் எழுந்து பக்கத்தில் இருந்த முற்றத்தில் கையலம்பிக் கொண்டாள். அதைக் கண்ட சிவஞான முதலியார், “அடாடா! உங்களுடைய சாப்பாட்டுக்கு சத்துருவாக நான் வந்து சேர்ந்தேன். நீங்கள் இன்னும் ஐந்து நிமிஷ நேரம் இருந்து சாப்பிட்டு வருவதற்குள், தலை போய்விடாது” என்று அவளுக்கு உபசார வார்த்தை சொல்ல, கல்யாணியம்மாள், “இல்லை இல்லை; நான் சாப்பிட்டாகி விட்டது; போதும்” என்று கூறிய வண்ணம், அவர் இருந்த இடத்திற்கு வந்தாள். அவள் அப்போதே போஜனத்திற்கு ஆரம்பித்தாள் என்பதும், அவள் ஒர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/245&oldid=649719" இலிருந்து மீள்விக்கப்பட்டது