பக்கம்:மதன கல்யாணி-1.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 239

சப் இன்ஸ்:- எப்படி அனுப்புகிறது? அவனைப் பற்றிய விவரத்தை நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். அதோடு அந்த பாலாம்பாள் இன்னமும் நன்றாகத் தெளிவடையவில்லை. அவளிடத்திலும் நாங்கள் இன்னொருதரம் நன்றாக வாக்குமூலம் வாங்க வேண்டும். நாளைய காலையிலே தான் பையனை சப் ஜெயிலுக்கு அனுப்பப் போகிறோம். ஒருவேளை இந்தப் பையன் அனுப்பப் போகிறோம். ஒரு வேளை இந்தப் பையன் உங்களுக்குத் தெரிந்தவனாய் இருப்பானோ? தெரிந்தால், சொல்லுங்கள்.

சிவஞான:- இல்லை இல்லை. அவன் யார் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியாது.

சப் இன்ஸ்:- அப்படியானால், அவனிடம் பேசி, அவனுடைய பக்கத்தில் உங்களை வக்கீலாக வைத்துக் கொள்ளும்படி கேட்க வந்தீர்கள் போலிருக்கிறது. அதற்கு நாங்கள் அனுமதி கொடுக்க முடியாது. நாளைய காலையில் அவனை சப்ஜெயிலுக்கு அனுப்பி விடுகிறோம்; அதன் பிறகு நீங்கள் மாஜிஸ்டிரேட்டின் அனுமதி பெற்றுக் கொண்டு போய் பார்த்துக் கொள்ளுங்கள். இவ்வளவு தானே? நான் போகலாம் அல்லவா?

சிவஞான:- நான் என்னுடைய உத்யோக முறையிலே வரவில்லை. என்னுடைய நண்பரான ஒருவருடைய வீட்டுப் பையன் நேற்று முதல் காணாமல் போயிருக்கிறான் என்று சொன்னார்கள். இவன் அவனாய் இருப்பானோ என்ற சந்தேகம் உண்டாயிற்று. அவனா அல்லவா என்பதை பார்த்து நிச்சயித்துக் கொண்டு போகவே வந்தேன். - என்றார்.

சப் இன்ஸ்:- ஒகோ அப்படியா காணாமல் போயிருப்பவன் யார் வீட்டுப் பையன்? - என்றார்.

அதைக் கேட்ட சிவஞான முதலியார் உண்மையை உடனே சொல்லி விடக் கூடாதென்றும் முன் எச்சரிக்கையினால் சிறிது இழுப்பாகப் பேசத் தொடங்கி, “அவர்கள் இருப்பது வெளியூர். அவர்கள் யார் என்பதை நான் சொன்னால் கூட உங்களுக்குத் தெரியாது. பையனோடு நான் பேசமாட்டேன். துரத்தில் நின்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/257&oldid=649744" இலிருந்து மீள்விக்கப்பட்டது