பக்கம்:மதன கல்யாணி-1.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 மதன கல்யாணி

தந்திரமாகப் பார்த்துவிட்டு வந்திருக்கிறேன். ஆனால் இந்த நாடகக் காரி இப்போது என்ன நிலைமையில் இருக்கிறாளோ, இவளை நாம் இப்போது பார்க்க முடியுமோ முடியாதோ, அது தான் கவலையாக இருக்கிறது” என்று மிகுந்த கவலையோடு கூறினார்.

அதைக் கேட்ட கல்யாணியம்மாள், “அவளுடைய பங்களா எங்கே இருக்கிறது? அதை நீங்கள் இதற்கு முன் பார்த்திருக்கிறீர் களா?” என்றாள். -

சிவஞான முதலியார், “அந்த பங்களா இங்கே இருந்து அரைக்கால் மயில் துரத்தில் இருக்கிறது. இந்தப் பாதையில், அந்த ஒரு பங்களாவே இருக்கிறது; அதைத் தவிர, வேறே பங்களா இல்லை” என்றார்.

அதன் பிறகு பத்து நிமிஷ நேரத்தில் அவர்களது பெட்டி வண்டி பாலாம்பாள் இருந்த பங்களாவின் வாசலில் வந்து நின்றது. உடனே சிவஞான முதலியார் வண்டியை விட்டுக் கீழே இறங்கி, மூடப்பட்டிருந்த இரும்புக் கம்பிக் கதவண்டை சென்று, அதைத் தள்ளித் திறக்க முயல, அது பூட்டப்பட்டிருந்தது என்பது உடனே தெரிந்தது; பாலாம்பாள் தனிமையில் அந்த பங்களாவில் இருக்க அஞ்சி, அவ்விடத்தை விட்டு வேறிடத்திற்குப் போயிருப்பாளோ என்ற சந்தேகம் அவரது மனதில் எழுந்தது; அவர் பூட்டை இன்னொரு முறை தொட்டு நன்றாகத் தடவிப் பார்த்தார்; வெளிப் புறத்தில் இருந்து பூட்டினாலும், உட்புறத்தில் இருந்து பூட்டி னாலும் அந்தப் பூட்டு அதே இடத்தில் இருக்கக் கூடியதாகக் காணப்பட்டது. இராக்காலம் ஆதலால் அவள் கதவை உட்புறத்தில் பூட்டிக்கொண்டு இருப்பாளோ என்ற நினைவும் உண்டாயிற்று. அவர் உடனே நிமிர்ந்து, உட்புறத்தில் இருந்த கட்டிடத்தை உற்று நோக்கினார்; கதவிற்கும் கட்டிடத்திற்கும் இடையில் தென்னம்பிள்ளைகளும், பாக்கு மரங்களும் வரிசையாக வைத்து வளர்க்கப்பட்டு இருந்தமையால் அவற்றின் பச்சை மட்டைகள் வழியை மறைத்து இருள் உண்டாக்கிக் கொண்டிருந் தன. அப்படி இருந்தும், உட்புறத்தில் வெளிச்சம் இருப்பதாகக் காணப்பட்டது. அதிலிருந்து, அதற்குள் மனிதர் அவசியம் இருக்க வேண்டும் என்று அவர் உறுதி செய்து கொண்டு, பெட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/260&oldid=649752" இலிருந்து மீள்விக்கப்பட்டது