பக்கம்:மதன கல்யாணி-1.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 மதனகல்யாணி

தெரியாதவனும், ஆபத்து சமயத்தில் கைவிட்டு ஓடிப்போனவனு மான ஒரு மைனரை நம்பி, கிழவரது சிநேகத்தையும், தனது நாடக உத்தியோகத்தையும் விட்டுவிட அவளது மனம் ஒப்பவில்லை. ஆதலால், மைனர் ஒடிப்போனான் என்ற விஷயம் அவளுக்கு மிகவும் அனுகூலமாகத் தோன்றியது; தனக்கும், மைனருக்கும் அன்று இரவு சிநேகம் ஏற்பட்டதாகவே அவள் நினையாமல், கிழவரிடத்தில் வழக்கத்திற்கும் அதிகமான வாத்சல்யத்தோடு நடந்து கொண்டு போலீஸார் இருந்ததைக் குறித்தும் லஜ்ஜைப் படாமல் அவரை அணைத்துக் கொண்டாள். ஆனால், அவர்கள் கீழே கிடந்த மெத்தையை எடுக்க, அதன் கீழிருந்து மைனர் கிளம்பியதைக் காணவே, அவள் திடுக்கிட்டு, பேரச்சமும், பெருந் திகைப்பும் கலக்கமும் கொண்டுவிட்டாள். அந்தச் சமயத்தில் மைனர் எப்படியும் உண்மையைச் சொல்ல வேண்டி இருக்கும் ஆதலால், அதற்குத் தானும் உத்தரம் சொல்வதோடு, தனது இரவிக்கைக்குள் இருந்த பத்திரத்தையும் ஒருகால் காட்ட நேருமோ என்ற கவலையும் பீதியும் கொண்டவளாய், அவள் ஒரு நிமிஷ நேரம் ஒன்றும் தோன்றப் பெறாதவளாய், ஸ்தம்பித்து நின்றாள் ஆனாலும், அவளது சமயோசிதமான சாகசடத்தி அவளுக்கு உடனே துணை புரிந்தது. தான் மைனரை அறியாதவள் போல நடித்து, தனக்கு மயக்கம் வருகிறதென்று சொல்லிப் படுத்துக் கொண்டாள். அதன் பிறகு மைனர் எப்படியாவது போகட்டும் என்று நினைத்து அவள் அவ்வாறு கூறி சயனித்துத் தனது கண்களை மூடிக்கொண்டாள். ஆனால், அவள் உண்மையில் தனது ஸ்மரணையை இழக்காமல், அங்கே நிகழ்ந்தவற்றை கவனித்துக் கொண்டே படுத்திருந்தாள். போலீசார் மைனரை திருடர்களுள் ஒருவனென்று நினைத்துப் பிடித்துக் கொண்டதை யும், அவன் தெரிவித்த வரலாறுகளையும், கிழவர் தனது கற்பைப் பற்றிப் புகழ்ந்து பேசியதையும், அலமாரியில் பத்திரம் தேடப் பட்டதையும், அவள் நன்றாக உணர்ந்தவளாய், அசையாமலும், பேச்சு மூச்சின்றியும் படுத்திருந்தாள். ஆனால், அவர்கள் தனது இரவிக்கைக்குள் இருந்த பத்திரத்தை ஒருகால் கண்டு எடுத்துவிடப் போகிறார்களே என்ற அச்சமும் கவலையும் கொண்டு, ஒரு புறமாகக் குப்புறப் படுத்து, பத்திரம் இருந்த பக்கத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/268&oldid=649770" இலிருந்து மீள்விக்கப்பட்டது