பக்கம்:மதன கல்யாணி-1.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 மதன கல்யாணி

இடையில் கிழவர் ஆகாரம் உண்ணும்படியாவும், மருந்தை உட்கொள்ளும் படியாகவும், அடிக்கடி உபசரித்தது அவளுக்குப் பெருத்த வதையாக இருந்தது. போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மறுபடியும் அவளிடம் எல்லா விவரங்களையும் நன்றாக அறியும் பொருட்டு வாக்குமூலம் வாங்க வேண்டுமென்று இரண்டு முறை ஜெவானை அனுப்ப, அப்போது அவள் பேச சிறிதும் வல்லமையற்றவள் போல நடித்து, வாக்குமூலம் வாங்குவது மறுநாள் ஆகட்டும் என்று சொல்லும்படி நயமாகக் கூறிவிட்டு, தான் என்ன செய்வதென்பதைப் பற்றியும், மைனரை விலக்குவதா, கிழவரை விலக்குவதா என்பதைப் பற்றியும் சிந்தித்தவளாகப் படுத்திருந்:5ாள்; அன்று வி.பி. ஹாலில் நாடகம் நடத்தப்படும் என்ற விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தமை யால், கிழவர் அன்று மாலையிலேயே அவளை விட்டுப் போக நேர்ந்தது; தனிமையில் இருக்க அவள் மிகவும் பயந்தனள் ஆதலால், அதன் பொருட்டு, தனது ஆட்களில் நால்வரையும், வேலைக்காரிகளில் மூவரையும் வருவித்து அவளது பணிவிடை யின் பொருட்டும் பாதுகாப்பின் பொருட்டும் வைத்திருந்தார் ஆதலால் அன்று இரவில் நாடகம் முடிந்தவுடன் இரண்டு மணிக்குத் தாம் அங்கே வருவதாகக் கூறிவிட்டு, கிழவர், மாலை ஐந்து மணிக்குப் புரசைப்பாக்கம் போய்விட்டார். அதன் பிறகு பாலாம்பாள் தனது புதிய வேலைக்காரர்களுள் முக்கியமான ஒருவனை அழைத்து, வெளிக்கதவைப் பூட்டிவைக்கும்படி யாகவும், எவர் வந்தாலும் உள்ளே விட வேண்டாம் என்றும், போலீசார் வாக்குமூலத்திற்காக வந்தால் இன்னம் குணமடைய வில்லை ஆதலால் மறுநாள் வரும்படி சொல்லவும் ஏற்பாடு செய்துவிட்டு, தனது போஜனத்தை நன்றாக முடித்துக் கொண்டு. சயனமாளிகையின் கதவை உட்புறத்தில் தாளிட்டுக் கொண்டு கட்டிலில் படுத்து சிந்தனையில் ஆழ்ந்து கிடந்தாள். பொழுது சென்று கொண்டே இருந்தது. துயில் வேண்டும் என்று அவள் பெரிதும் முயன்றாள். ஆனாலும், அவளது மன எழுச்சியும், கலக்கமும் நித்திரை உண்டாகாமல் தடுத்துக் கொண்டிருந்தன. அந்த நிலைமையில் இரவு பத்தரைமணி சமயத்தில், வேலைக் காரன் கதவை இடிக்கவே, அதைக் கேட்ட அந்த அணங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/270&oldid=649776" இலிருந்து மீள்விக்கப்பட்டது