பக்கம்:மதன கல்யாணி-1.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 மதன கல்யாணி

உன்னுடைய அருமையான குணங்களைப் பற்றி ஜனங்கள் சொல்லிக் கொள்ளுகிறபடியே நீயும் நடந்து கொள்ளுகிறாய். நடு இரவில் போகிறோமே; மிகவும் அசெளக்கியமாகப் படுத்திருக்கை யில் போகிறோமே; எப்படி இருக்குமோ, எப்படிப்பட்ட மரியாதை கிடைக்குமோ, என்று நாங்கள் தயங்கித் தயங்கி வந்தோம். இப்போது உன்னைக் கண்டு உன்னுடைய அருமையான குணத்தைப் பார்க்க, எங்களுடைய மனம் குளிர்ந்து விட்டது. நாங்கள் கோரிவந்த காரியம் முடிவடைந்ததற்கு மேல் அதிக சந்தோஷம் உண்டாகிறது” என்று புன்னகை செய்த வண்ணம் கூற, அந்த ஸ்தோத்திர மொழியைக் கேட்ட பாலாம்பாள் மிகுந்த வெட்கமும் நாணமும் அடைந்தவள் போலக் கோணிக் குனிந்து புன்னகையும் மகிழ்ச்சியும் தாண்டவமாடிய வதனத்தோடு தனது கைவிரல்களைப் பார்த்த வண்ணம், “சரி தங்கள் சித்தம் என் பாக்கியம்; பெரியவர்களாக இஷ்டப்பட்டுக் கொடுக்கும் புகழ்ச்சியைப் பற்றி ஆக்ஷேபனை சொல்ல சிறியவர் களுக்கு அதிகாரமே இல்லை. சிறியவர்கள் அதை மிகுந்த சந்தோஷத்தோடும். நன்றியறிதலோடும் ஏற்றுக் கொள்ளுவதே கடமை, நேற்று நடு இரவில் எனக்கு இரண்டு லட்சம் ரூபாய் களவு போனது; இன்று இரவில், மிகவும் பெரிய மனிதர்களான தாங்கள் இருவரும் வந்தது, இரண்டு கோடி ரூபாய் வந்தது போலாயிற்று. நேற்றைய விசனம் எல்லாம் இன்றைய சந்தோஷத்தில், இருந்த இடம் தெரியாமல் பறந்து போய்விட்டது. அது ஒரு புறம் இருக்க, தாங்கள் ஏதோ அவசரமான காரியத்தைப் பற்றி என்னிடத்தில் பேச வேண்டும் என்று சொன்னதாக, வேலைக்காரன் தெரிவித்தான். அதை இன்னதென்று கேட்காமல், நான் தங்களுடைய கவனத்தை வேறே விஷயத்தில் மாற்றிக் கொண்டிருக்கிறேன். அதுவும் தவிர இந்த ஏழையை இவ்வளவு தூரம் பெருமைப்படுத்தி, இந்த இரவில் வந்துள்ள தாங்கள் இன்னார் என்பதை முதலில் தெரிந்து கொள்ளவும் என் மனம் ஆசைப்படுகிறது” என்று அன்பாக மொழிந்தாள்.

உடனே சிவஞான முதலியார் புன்னகை செய்து, “எல்லா விஷயத்தையும் தெரிவிக்கிறேன். அதற்கு முன் ஒரு சிறிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/274&oldid=649783" இலிருந்து மீள்விக்கப்பட்டது