பக்கம்:மதன கல்யாணி-1.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 275

எங்களுடைய ஜாதியைச் சேர்ந்தவளாக இருந்தால், இந்நேரம் நான் இவ்வளவு தூரம் தாமதிக்க மாட்டேன்; யார் எதை வேண்டு மானாலும் சொல்லிக் கொள்ளட்டும் என்று உன்னையே என்னுடைய பையனுக்குக் கலியாணம் செய்து வைத்து விடுவேன். பையனோ உன்னிடத்தில் தன்னுடைய உயிரையே வைத்திருக்கிறான். அழகிலும் நற்குண நல்லொழுக்கத்திலுமோ உனக்குச் சமமானவள் இந்த உலகத்தில் இருப்பாளோ என்பதே சந்தேகம். ஆனால், நாடகத்தில் சேர்ந்திருந்த ஒரு பெண்ணை, மாரமங்கலம் ஜெமீந்தாரிணியம்மாள் தன்னுடைய பிள்ளைக்குக் கட்டிவிட்டாள் என்று ஜனங்கள் அவதூறாகப் பேசுவார்கள். அதைப்பற்றி நான் கொஞ்சமும் இலட்சியமே செய்கிறவள் அல்ல. காரியம் பெரிதேயன்றி வீரியம்,பெரிதல்ல. எப்படியாவது நீ தான் பெரிய மனசு செய்து, இந்தச் சமயத்தில் எங்களுக்குக் கைகொடுக்க வேண்டும்” என்று மிகவும் இரக்கமாக நயந்து வேண்டிக் கொண்டாள். அப்போது கல்யாணியம்மாளது நிலைமையோ நிரம்பவும் பரிதாபகரமாக இருந்தது. சிவஞான முதலியாரோ மேலே என்ன செய்வதென்பதை அறிய மாட்டாமல் சிந்தனையில் ஆழ்ந்தவராய், மைனரால் எழுதப்பட்டுள்ள பத்திரத்தில் கண்ட விஷயங்கள் எல்லாம் சட்டப்படி செல்லக் கூடியவைகளா அல்லவா என்பதைப் பற்றி மனதிலேயே சட்ட ஆராய்ச்சி செய்ய லானார். என்றாலும், அவரது கவனம் மற்ற இருவரும் சம்பாஷித்த திலும் சென்று கொண்டே இருந்தது. 3.

கடைசியாக, கல்யாணியம்மாள் வேண்டிக் கொண்டவுடனே பாலாம்பாள் மிகுந்த குழப்பம் அடைந்தவள் போலத் தனது இடது கையால் நெற்றியை அழுத்திக் கொண்டு இரண்டொரு நிமிஷ நேரம் ஏதோ யோசனை செய்தவளாய், “நீங்கள் என்னை தரும சங்கடத்தில் விட்டுவிட்டீர்களே. இப்பேர்ப்பட்ட பெரிய பிரபுக்க ளாகிய நீங்கள், கேவலமான நிலைமையில் உள்ள என்னிடம் ஒரு விஷயத்தை அபேசுவிக்க, அதை நான் செய்யக்கூடாதவளாய் இருக்கிறேனே என்பது தான் என் மனதை வதைக்கிறது. அந்தப் பிள்ளையால், மானத்தோடிருக்கும் எத்தனை பேருக்கு தீராத் துன்பம்; மீளாத அவமானம்; நான் நன்றாக யோசனை செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/293&oldid=649821" இலிருந்து மீள்விக்கப்பட்டது