பக்கம்:மதன கல்யாணி-1.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 277

கண்மணியம்மாளையும், இது பெரிதும் தண்டிப்பது போலாகும். பாலாம்பாளுக்கு பட்ட மகிஷியின் ஸ்தானமும், அவளது வயிற்றில் உதிக்கும் பிள்ளைக்கு ஜெமீந்தார் என்ற பட்டமும் உண்மையில் கிடைக்கப் போகிறதில்லை ஆனாலும், அவற்றின் பொருட்டு பாலாம்பாளும், கண்மணியம்மாளும் பிற்காலத்தில் பலவகையில் சச்சரவுகள் செய்து கொள்ளவும் நேரும் ஆதலால், அதனால் உண்டாகும் துன்பங்களைக் கண்மணியம்மாள் அனுபவிக்க வரும் என்ற ஒரு திருப்தியையும் கல்யாணியம்மாள் எதிர்பார்த்ததன்றி, மைனர் பாலாம்பாளை வைப்பாக வைத்துக் கொண்டிருப்பது பற்றி கண்மணியம்மாள் எப்போதும் தொந்தர வுப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்றும் விரும்பினாள். மேற் கூறப்பட்ட இத்தனை அனுகூலங்களையும் கருதி, மைனரது விருப்பப்படி பாலாம்பாள் அவனுக்கு வைப்பாக இருக்க தான் அனுமதி கொடுத்து விடலாம் என்ற ஒருவகையான முடிவிற்கு கல்யாணியம்மாள் வந்தாள். ஆனாலும், அதற்கு பாலாம்டாள் இணங்குவாளோ மாட்டாளோ என்ற ஐயம் அவளைப் பெரிதும் வதைத்தது. அவள் தான் இருந்த நாற்காலியை விட்டு எழுந்து, தானும் சிவஞான முதலியாரும் தனிமையில் இரண்டொரு நிமிஷ நேரம் பேசிவிட்டு வருவதாக பாலாம்பாளிடம் சொல்லிவிட்டு, அவரோடு அந்த அறையின் வாசற்படிக்கப்பால் மறைவாகப் போய், தாங்கள் என்ன செய்யலாம் என்பதைப் பற்றி அவரிடம் கலந்து யோசனை செய்யத் தொடங்கினாள். அவ்வாறு கால் நாழிகை நேரம் சென்றது. இருவரும் ஒரு வகையான முடிவு செய்து கொண்டு திரும்பி உள்ளே வந்து ஆசனங்களில் அமர்ந்தனர். உடனே கல்யாணியம்மாள் பாலாம்பாளை நோக்கி ஏதோ பேச வாயைத் திறந்தவள், அந்த இழிவான விஷயத்தை எப்படிப் பிரஸ்தாபிப்பது என்ற நினைவினால் லஜ்ஜை அடைந்து தயங்கி இரண்டொரு தரம் கனைத்துக் கொண்டாள். அவள் தன் மனதை வெளியிட மாட்டாமல், பின் வாங்குகிறாள் என்பதை உணர்ந்து கொண்ட பாலாம்பாள் புன்சிரிப்போடு அவளை நோக்கி, “மனதில் உள்ளதைச் சொல்லி விடுங்கள். அதைப் பற்றி ஏன் இவ்வளவு யோசனை? நீங்கள் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். அதைப்பற்றி நான் வருத்தப்படுவேன் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/295&oldid=649824" இலிருந்து மீள்விக்கப்பட்டது