பக்கம்:மதன கல்யாணி-1.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 293

பாய்ந்து அவனது உடம்பை நன்றாகக் கட்டிப் பிடித்துக் கொண்ட வண்ணம், “ஐயா! எஜமானே! பெட்டியிலே கவுறு இருக்குது எடுங்க” என்று சிவஞான முதலியாரை அழைக்க, அவர் ஒடோடியும் சென்று, பெட்டிக்குள் இருந்த பெருத்த மணிக் கயிற்றை எடுத்துக் கொண்டு ஓடிவர, அந்தக் கயிற்றால் வண்டிக் காரன் திருடனது கைகளை மார்போடு சேர்த்து இறுகக் கட்டி விட்டான். அதே சமயத்தில் “பலே! சபாஷ்!” என்ற சந்தோஷ கூச்சலுடன் குதிரைப் பிரயாணி அங்கே வந்து சேர்ந்தான். அப்படி வந்தது யார் என்று யாவரும் வியப்போடு பார்க்க, அவர் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கக் கண்ட சிவஞான முதலியாரும், கல்யாணியம்மாளும் பரம சந்தோஷம் அடைந்த தன்றி “அப்பாடா பிழைத்தோம்” என்று கூறிய வண்ணம், மிகவும் பரிதாபகரமான பார்வையாக இன்ஸ்பெக்டரது முகத்தை நோக்கினர்; அந்த ஆபத்து வேளையில் கடவுளே தங்களைக் காப்பாற்ற அவ்வாறு வந்ததாகவே நினைத்து ஈசுவரனைத் துதித்தனர். அங்கே வந்த இன்ஸ்பெக்டர் சிவஞான முதலியாரை அழைத்து, அங்கே நிகழ்ந்த சம்பவத்தின் விவரங்களையும், அவர்கள் யார் என்பதையும் கேட்டறிந்த பின்னர், “சரி; நான் சைதாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர். இது என்னுடைய டிவிஷனைச் சேர்ந்தது. நீங்கள் எல்லோரும் ஸ்டேஷனுக்கு வர வேண்டும். வந்து வாக்குமூலம் கொடுத்து விட்டு, உங்கள் ஊருக்குப் போகலாம். ஏறுங்கள் வண்டியில்; அடே வண்டிக்காரா! இந்தத் திருடர்கள் இரண்டு பேரையும் வண்டிக்குள் எடுத்துப் போடு” என்று அதிகாரத்தோடு கூற, வண்டிக்காரன் செத்துப் போய்க் கிடந்த திருடனையும், கட்டப்பட்டுக் கிடந்த திருடனையும் எடுத்துப் பெட்டி வண்டிக்குள் போட்டு, கதவுகளை மூடி நன்றாகத் தாளிட்டான். வண்டியின் பின்புறத்தில், சேவகர் உட்காரும் பலகையில் சிவஞான முதலியாரும் கல்யாணியம் மாளும் உட்கார்ந்து கொண்டனர். திருட்டுச் சொத்துகள் அடங்கிய மூட்டையை, தாமே பந்தோபஸ்தாகக் கொண்டு வர வேண்டும் என்று கூறி, இன்ஸ்பெக்டர் தமது கையில் வாங்கிக் கொண்டார்; வண்டிக்காரன் வண்டியில் உட்கார்ந்து அதைத் திருப்பி ஓட்டத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/310&oldid=649856" இலிருந்து மீள்விக்கப்பட்டது