பக்கம்:மதன கல்யாணி-1.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 299

கல்யாணியம்மாள் தனது வீண் பெருமையினாலும் கோபத் தினாலும் கூட்டியோ குறைத்தோ சொல்லி இருக்க வேண்டும் என்றும் அவள் நினைத்தாள். அன்னிய ஸ்திரீகளின் முகத்தை நிமிர்ந்து பார்க்கவும் நானும் குணமுடைய மகா உத்தம புருஷனான மதனகோபாலன் அவ்வளவு தூரம் துணிந்து, கல்யாணியம் மாளிடத்தில் தகாத வார்த்தைகளை மொழிந்திருப்பானோ என்ற நினைவே எழுந்து அவளது மனதில் பெருத்த வியப்பையும் திகைப்பையும் உண்டாக்கின. தனக்கே உரியவன் என்று தான் மதித்திருந்த அந்த யெளவனப் புருஷன் வேறொரு ஸ்திரீயை நாடினானோ என்ற நினைவினால் உண்டான பொறாமை சகிக்க ஒண்ணாததாக இருந்தது. தான் அவன் மீது காதல் கொண்டிருப் பது போல, அவனும் தன்மீது காதல் கொண்டிருப்பான் என்று அவள் அதுகாறும் எண்ணியிருந்த பேதை எண்ணமானது பொய்த்துப் போனது அவளது உயிரே படிரென்று தெரித்துப் போனது போல இருந்தது. அவளது மனதில் கோடாது கோடி நினைவுகளும் சங்கடங்களும் எழுந்து அடக்க ஒண்ணாத உரத்தோடு முரணிப் போர்புரியத் தொடங்கின. ஆகா இப்படியும் நடக்குமா என்ன அதிசயம்! கல்யாணியம்மாளிடம் இவ்வளவு கேவலமாக நடந்து கொள்ளக்கூடிய மனிதன் மற்றவரிடம் எல்லாம் பரம யோக்கியனைப் போல நடக்க முடியுமா மேனி அழகும், குணத்தழகும், நடத்தையழகும், சொல்லழகும் அபாரமாக அமைந்துள்ள மனிதன் இப்படிப்பட்ட இழிவிற்கு உடன்படுவானோ! சே! இந்த நடத்தை அவனுடைய இயற்கை சுபாவத்துக்கு சிறிதும் ஒத்ததல்ல. அவன் அவ்வாறு செய்யக் கூடியவனே அல்ல. அப்படியானால் கல்யாணியம்மாள் சொன்னது பொய்யோ! இப்படிப்பட்ட கேவலமான காரியம் உண்மையில் நடந்திருந்தாலும், உத்தம குணமும், கண்ணிய புத்தியும் உடைய ஸ்திரீகள், இதை வெளியிட வெட்காரோ! அப்படி இருக்க, கல்யாணியம்மாள் இந்த விஷயத்தில் பொய்யான கற்பனை செய்து இவ்வாறு வெளியிட்டாள் ஆனாலும், தன் மானத்தைத் தானே கெடுத்துக் கொள்ள நினைப்பாளோ? அவளோ நல்ல உன்னத பதவியில் இருப்பவள்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/316&oldid=649867" இலிருந்து மீள்விக்கப்பட்டது