பக்கம்:மதன கல்யாணி-1.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 301

இருந்தால், கல்யாணியம்மாள் வெளியிடும் அவதூறைக் கேட்க, அவனுடைய மனம் எவ்வாறு பதறுமோ! அவன் வீணை கற்றுக் கொடுக்கப் போகும் ஒவ்வோரிடத்திலும், அவனை இகழ்ந்து வேலையை விட்டு விலக்கி இருந்தால், ஆகா! அவனுடைய நிலைமை எப்படி இருக்காது! எந்த தெய்வமாகிலும் என் முன்னே வந்து இன்னது தான் உண்மையான சங்கதி என்று தெரிவிக்கு மானால், அது எவ்வளவு அனுகூலமாக இருக்கும் என்னுடைய நிலைமை பாதிக் கிணற்றைத் தாண்டியவனுடைய நிலைமையைப் போல ஆகிவிட்டதே! என்னைப் போன்ற பாவி ஜென்மம் இந்த உலகத்தில் இருக்கவும் வேண்டுமா இளம் பிராயத்திலேயே தாய் தகப்பனை இழந்ததும், எத்தனையோ நற்குண புருஷர்கள் நிறைந்த இந்த உலகத்தில் கேவலம் இழிகுணமும் துன்மார்க்க புத்தியும் துர்நடத்தையும் நிறைந்த அதம்ாதமனான மாரமங்கலம் மைனர் எனக்கென்று புருஷனாகக் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதும், அடாடா! நான் பூர்வ ஜென்மத்தில் செய்த மகா பாதகத்தை அல்லவா காட்டுகின்றன. எவ்வளவோ அருமையான குணமும் உயர்வான நடத்தையும் உள்ள புருஷனான அந்த மதனகோபால னிடத்தில் மகா பாவியாகிய நான் ஆசை வைத்ததனாலே தான் அவனும் கெட்டுப் போனானே’ என்னுடைய அதிர்ஷ்டஹீனமே அவனையும் கெடுத்து விட்டதோ அல்லது, அப்படிப்பட்ட விலை மதிப்பற்ற நற்குணமணியான புருஷன் எனக்கு வாய்த்து விடப் போகிறானே என்ற பொறாமையால், என்னுடைய பூர்வ வினையே அவன் விஷயத்தில் இப்படிப்பட்ட சதி செய்ததோ! ஆ! தெய்வமே என்ன கொடுமை! என்ன கொடுமை!” என்று கண்மணியம்மாள் பலவாறு நினைத்து நினைத்து உருகிப் புரண்டு துவண்டு அழுதிருந்த தருணத்தில் அவளிருந்த அறையின் கதவு திறக்கப்பட்டது. கையில் பிடித்த விளக்கோடு மீனாகூஜியம்மாள் உள்ளே நுழைந்து, “என்ன கண்மணி மணி எட்டாகிறது, விளக்குக்கூட இல்லாமல் இருட்டில் படுத்துக் கொண்டிருக் கிறாயே! சாப்பிட நேரமாகிறது; எழுந்து வா” என்று அன்போடு அழைத்த வண்ணம் அவளது நிலைமையை உற்று நோக்கினாள். அவள் மிகவும் அலங்கோலமாக அழுது கொண்டு கிடந்ததையும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/318&oldid=649871" இலிருந்து மீள்விக்கப்பட்டது