பக்கம்:மதன கல்யாணி-1.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 19

கொடுத்த தங்கத்தகடாயினும் தந்தத்தகடாயினும் கொண்டு பொருத்தப்பட்டதோ என கண்ணாடி போல வழுவழுப்பும் பளபளப்பும் அமைந்து, காண்போர் முகம் அதில் பிரதிபிம்பித்தது. பூரண சந்திரோதயமோ, தலை அவிழ்ந்து மலர்ந்து நகைத்த செந்தாமரை மலரோ, இனிமையையும், குளிர்ச்சியையும் அள்ளி வீசிய அமிர்த கலசமோ எனத் தோன்றிய அவளது சுந்தர வதனம்,

‘கொண்டலின் குழவி யாம்பல் குனிசிலை வள்ளை கொற்றக் கெண்டைஒள் தரள மென்றிக் கேண்மையை கிடந்த திங்கள் மண்டில வதன. மென்று வைத்தனன் விதியே நீயப் புண்டரீகத்தை யுற்ற பொழுதது பொருந்தித் தேர்வாய்’ என்று வருணிக்கத் தக்கதாய், ரதிதேவி தனது மோகனாஸ்திர பரிவாரங்களோடு கொலு வீற்றிருந்த வசீகர சபாமண்டபம் போல, வருணிக்க இயலாத வாமக் களஞ்சியமாய், அவளது தேகமானது பதினான்கு லோகங்களுக்கும் மேலே நின்ற சுவர்க்க லோகமாய் காணப்பட்டது.

சீதளாகரமான அத்தகைய வனத்தின் வசீகரத் தன்மையைப் பதினாயிரம் மடங்கு சிறப்பித்துக் காட்டிய அவளது சிரத்தின் அளக பாரமோ சொல்லிலடங்கா எழில் வாய்ந்ததாய்,

‘காளினைக் கழித்துக் கட்டிக் கள்ளினோ டாவி காட்டிப்

பேரிருட் பிழம்பு தோய்ந்து நெறிவுறிப் பிறங்கு கற்றைச் சோர்குழல் தொகுதிச் சூழல் சும்மைசெய் தனைய தம்மா நேர்மையைப் பருமை செய்த நிறைநறுங் கூந்தல் நீத்தம்’

என்ற லட்சனப்படி அமைந்திருந்தது. இத்தனை வைபவங்களுக் கிடையில் நின்ற அவளது கண்ணிணைகள் ஒரு நொடியில் மனிதரைக் கொல்லும் விஷமாகவும், அதே நொடியில் தமது மலர்ச்சியால் உயிர்கொடுக்கும் அமிர்த சஞ்சீவியாகவும் அமைந்து முகத்தைக் காட்டிலும் விசாலமாய் காதளவு ஒடி நின்று,

‘பெரியவாய்ப் பாவை யொவ்வா பிறிதொன்று நினைந்து பேச

அரியவாய் ஒருவ ருள்ளத் தடங்குவ வல்ல வுண்மை தெரிய ஆயிரக்கால் நோக்கில் தேவர்க்கும் தெய்வ மென்னக் கரியவாய் வெளிய வாகும் வாள்தடம் கண்கள் அம்மா’

என்று யாவரும் வியக்கும் வண்ணம் அமைந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/37&oldid=649902" இலிருந்து மீள்விக்கப்பட்டது