பக்கம்:மதன கல்யாணி-1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 25

நோக்கிக் கொண்டிருந்தான். இரண்டு நிமிஷ நேரத்தில் கதவு திறக்கப்பட்டது. பெட்டி வண்டி பங்களாவுக்குள் போய்விட்டது. கதவும் திரும்ப மூடப்பட்டு உட்புறம் பூட்டப்பட்டது. பொன்னம் பலம் திரும்பவும் தனது பைசைகில் வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டு மேலும் சிறிது தூரம் மேற்கில் சென்று அந்த பங்களாவின் முன் புறத்தில் நன்றாக அடையாளம் பார்த்துக் கொண்டு, அது இத்தனாவது மயில், இத்தனாவது பர்லாங்கு அப்பால் இருக்கிறது என்பதையும் சரியாக அறிந்து கொண்டு தனது துவிச்சக்கர வண்டியைத் திருப்பிவிட்டு இரவு ஒரு மணி சமயத்தில் துரை ராஜாவின் பங்களாவிற்கு வந்து சேர்ந்தான்.

துரைராஜா மாரமங்கலம் மைனர் ஆகிய இருவரும் பொன்னம் பலத்தின் வருகையை எதிர்பார்த்த வண்ணம் மேன்மாடத்தில் கண் விழித்துச் சீட்டாடிக் கொண்டிருந்தனர். மேன்மாடக் கதவும் தாளிடாமல் வெறுமையாகச் சாத்தி வைக்கப்பட்டிருந்தது. பொன்னம்பலம் மேன்மாடத்திற்குச் சென்று, தான் பெட்டி வண்டியைத் தொடர்ந்து சென்ற வரலாற்றையும், மோகனாங்கி ஆலந்துருக்கு அருகில் உள்ள ஒரு பங்களாவில் இறங்கிய விபரத்தையும் விரிவாகக் கூறி அந்த பங்களாவின் இருப்பிடத்தைக் கண்டு பிடிப்பதற்குத் தேவையான குறிப்புகளை எல்லாம் தெரிவித்துவிட்டு, அவர்களது அனுமதியின் மேல் படுக்கைக்குச் சென்றான்.

பொன்னம்பலம் ஜெயமடைந்து வந்ததைக் கேட்ட மாரமங்கலம் மைனர் அப்போதே புறப்பட்டுப் போக வேண்டும் என்னும் ஆவல் கொண்டு துடித்ததைக் கண்ட துரைராஜா “மாப்பிள்ளை’ இப்போது போவதில் எவ்விதமான பயனும் ஏற்படாது. பொழுது விடிந்தவுடன் காலை ஆகாரத்தை முடித்துக் கொண்டு நான் முதலில் அங்கே போய் எப்படியாவது தந்திரம் செய்து, அவர்களுடைய சிநேகத்தைச் சம்பாதித்துக் கொண்டு வருகிறேன். அதன் பிறகு நீ போவதற்குச் செளகரியமாக இருக்கும்” என்றான்.

அதைக் கேட்ட மைனர், “ஓ! நல்ல காரியம் செய்தாய்! இன்று வி.பி. ஹாலில் இருந்து வந்த முதல், நீ அவளைப் புகழ்ந்து பேசுவதைப் பார்த்தால், உனக்கும் அவள் மேல் ஆசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/43&oldid=649916" இலிருந்து மீள்விக்கப்பட்டது