பக்கம்:மதன கல்யாணி-1.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மதன கல்யாணி

மைனர்:- அப்படியானால் அவளோடுகூட யார் யார் இருக்கிறார்கள் என்பதாவது தெரியுமா? - என்றான்.

அதைக் கேட்ட கருப்பாயி அவனது கருத்தை ஒருவாறு உணர்ந்து கொண்டவளாய்ப் புன்னகை செய்து, “ஒருத்தரையும் தெரியாதுங்க. வேனுமானா ஒரு சன நேரத்துலே தெரிஞ்சுக்கினு வந்து சொல்றேனுங்க. ஒங்க கருத்தெ நல்லா தெரியும்படி சொன்னா என்னாலே என்ன ஆவணுமோ அதெ ஒடனே செய்யறேன்” என்று கூறினாள்.

அதைக் கேட்ட மைனர், அவள் தனது கருத்தை நிறைவேற்று வதற்கு நிரம்பவும் அனுகூலமாய் இருக்கத் தக்கவள் என்று கண்டு கொண்டான் இருந்தாலும், அவளை உடனே நம்பிவிடக் கூடாது என்று சிறிது எச்சரிக்கையாகப் பேச ஆரம்பித்து, “எனக்கு உன்னால் ஆக வேண்டிய காரியம் என்ன இருக்கிறது? அப்படி இருந்தாலும் அதை ஒழுங்காகச் செய்து முடிக்கும் திறமை உனக்கு இருக்கிறது என்பதை நான் எப்படி உறுதியாக நம்புகிறது” என்றான்.

கருப்பாயி சிரித்துக் கொண்டு, “இம்பிட்டுப் பெரிய மனிசரான நீங்க, அலுவல் இல்லாமெயா ராசடாட்டெயெ உட்டு இம்பிட்டுத் துரம் வந்தீங்க! ஒட்டெச் சட்டியிலே தான் கொளுக்கட்டெ வேவும் இம்பாங்களே அது தெரியாதா? நீங்க வந்த சோலி இன்துன்னு எனக்குத் தெரிஞ்சு போச்சு: ஒங்கிளுக்கு என்னென்ன சங்கதி தெரியனுமோ அதெல்லாம் சொல்லிப்புட்டு, நீங்க போயிட்டு இன்னக்கிப் பொளுது சாய இஞ்சே வாங்க நான் எல்லா சங்கதியும் சொல்லிப்புட்றேன்” என்றாள்.

மைனர்:- சரி, அப்படியே செய்வோம். நீ மாத்திரம் இந்தக் காரியத்தை முடித்துக் கொடுப்பாயானால் உனக்கு நூறு ரூபாய் தருகிறேன். இந்த நாடகக்காரி இடத்தில் சிநேகம் செய்து கொள்ள வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்; அதற்காகவே நான் இங்கே வந்தேன். அவளோடு யார் யார் இருக்கிறார்கள்? வேலைக் காரிகளுள் எவளுடைய பேச்சை அவள் கேட்கிறாள்? இன்னம் வேறே எவனிடத்திலாவது அவள் பிரியம் வைத்திருக்கிறாளா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/50&oldid=649931" இலிருந்து மீள்விக்கப்பட்டது