பக்கம்:மதன கல்யாணி-1.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மதன கல்யாணி

இனத்தையும் சேராமல் விலங்கின் இனத்தையும் சேராமல் இரண்டிற்கும் இடையில் ஒரு புதிய சிருஷ்டியாக இருந்தான். அவனது அங்க அமைப்போ மனிதரைப் போல இருந்தது. தேக பலமும், குண அமைப்பும், கொடிய துஷ்ட விலங்குகளின் அமைப்பைப் போல இருந்தன. அந்தச் சிற்றுரில் அவனே எல்லோருக்கும் அதிபதியாகவும், மற்றவர் அவனது ஏவலை நிறைவேற்றும் நாய்களைப் போலவும் இருந்தனர். கதவைத் திறந்த வள்ளியம்மை என்பவள் அவனது ஆசை மனவாட்டி அவ்வூரில் உள்ள கூரை வீடுகளிற்கு நடுவில் அவனது ஒட்டு வீடு எப்படி ஒர் அரண்மனை போல இருந்ததோ, அது போல, மற்ற குறத்தி களுக்கிடையில் வள்ளியம்மை ஒரு சக்கரவர்த்தினி போலவும், அவளது ஆசைநாயகனான கட்டையன் குறவன் குறவர்களுக்குள் சக்கரவர்த்தி போலவும் விளங்கினார்கள். ஒவ்வொரு வீட்டுக் காரரும் கிரமமான வழியிலும் அக்கிரமமான வழியிலும் சம்பாதிக்கும் பொருளில் பத்தில் ஒரு பங்கு கட்டையன் குறவனுக்குக் கொடுத்து விட வேண்டும். அது நிற்க, கட்டையன் குறவன் கொள்ளையடிக்கச் சென்றால், அவன் எவர்களைக் கூப்பிடுகிறானோ அவர்கள் உடனே அவனோடு செல்ல வேண்டும்; அவன் கொள்ளை யடிக்கும் பொருள்களில் அவனாக மனதிரங்கி எதைக் கொடுப் பானோ அதையே அவர்கள் வாங்கிக் கொள்ள வேண்டும்; இத்தகைய ஒப்பற்ற சிறப்பு வாய்ந்த நம்பிராஜனது சன்னிதானத் திற்கே அம்பட்டக் கருப்பாயி வந்து சேர்ந்தாள்.

அவளைக் கண்டவுடனே கனைத்துக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்த கட்டையன், “கருப்பாயியா? வா அம்மே! இப்படிக் குந்திக்க என்ன சொகமா? ஆறு மாஷகாலமா இந்தப் பக்கமே காணமே” என்றான்.

அதற்குள் அவனுக்கெதிரில் வந்து தரையில் உட்கார்ந்து கொண்ட கருப்பாயி மகிழ்ச்சியைக் காட்டிய முகத்தோடு “சொகந் தாப்பா ஒங்கிட்ட வராமே என்ன போகாமே என்ன. வந்தாக்கா ஒனக்கு ஏதாச்சும் பலத்த வேட்டே கொண்டாரணும். இல்லாமெப் போனா, சொம்மா வாரத்துலே என்ன பெரயோசனம்? அதனாலே தான் வரல்லே” என்றாள். ..

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/56&oldid=649941" இலிருந்து மீள்விக்கப்பட்டது