பக்கம்:மதன கல்யாணி-1.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 - மதன கல்யாணி

தாருக்கு ஒவ்வொரு வருஷத்திலும் ஐந்து லட்சம் ரூபாய் வருமானம் வந்தது. இந்த ராஜதானிக்கே அதுதான் எல்லா வற்றிலும் பெருத்த சமஸ்தானமாகக் கருதப்பட்டு வருகிறது. இந்தக் கதை தொடங்குவதற்குப் பதினெட்டு வருஷங்களுக்கு முன் அந்த சமஸ்தானத்தைக் கடைசியாக ஒரு ஜெமீந்தார் ஆண்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வயது ஐம்பத்தைந்து: அவரது நாற்பத்தைந்தாவது வயதில் அவரது மனையாட்டி இறந்து போய்விட்டாள். அப்போது அவருக்கு ஆண் பெண் ஆகிய எவ்வித சந்ததியும் இல்லாதிருந்தது. ஆதலால் அவர் ஏகாங்கியாக இருந்தார். ஆனால் அந்த ஜெமீந்தாருக்குத் தம்பி மகன் ஒருவன் இருந்தான். அவனது பெற்றோர் அவன் குழந்தைப் பருவத்தினனா யிருந்த போதே காலஞ் சென்றனர். ஆதலால் அநாதையாக இருந்த அந்தச் சிறுவனை ஏகாங்கியான மூத்த ஜெமீந்தார் தமது குழந்தை போல் மதித்து மிகுந்த வாத்சல்யத்தோடு வளர்த்து அவனுக்கு நன்றாகக் கல்வி கற்பிக்க நினைத்து சென்னையில் இருந்த தமது பங்களாவில் கொணர்ந்து வைத்து சென்னைச் சர்வ கலாசாலையில் படிக்கும்படி ஏற்பாடு செய்து, அவனது பொருட்டு எண்ணிறந்த ஆள்மாகாணங்களை எல்லாம் அமர்த்தி வைத்தார். அவன் வயதடைந்தவுடன், அவனுக்கே தமது சமஸ்தானம் முழுதும் சேர வேண்டும் என்ற விருப்பம் கொண்டவராய், அவர் தமது சொந்த மகனைக் காட்டிலும், நூறு மடங்கு விசேஷமான அருமை பாராட்டி செல்வமாகவும் சிறப்பாகவும் அவனை வளர்த்து வந்தார். அவன் பதினேழு வயதடைந்தான். சென்னையில் இருந்த பல துஷ்ட நண்பர்களது சகவாசத்தால் அவன் பற்பல தீய வழிகளில் நடந்து, துன்மார்க்கச் செயல்களில் பிரவேசித்தான். அவன் ஆறுமாத காலத்திற்குள் ஒன்றிலிருந்து இன்னொன்றாய் கெட்ட காரியங்களில் இறங்கி தினந்தினம் ஆயிரக்கணக்காகப் பணச் செலவு செய்யத் தொடங்கினான். பெரிய தகப்பனாரால் அனுப்பப்படும் பணம் அவனது பெருவாரிச் செலவிற்குச் சிறிதும் போதாததாய்ப் போகவே, அவன் கடன் வாங்கத் தொடங்கினான். கிழட்டு ஜெமீந்தாருக்குச் சிறுவனது செயல்கள் எல்லாம் ரகசியமாக எட்டிக் கொண்டிருந்தன. அவர் மிகவும் வருந்தி அவனுக்கு அடிக்கடி கடிதம் எழுதி நயமாகவும் பயமாகவும் புத்தி சொல்லிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/60&oldid=649949" இலிருந்து மீள்விக்கப்பட்டது