பக்கம்:மதன கல்யாணி-1.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் . 61

அதைக் கேட்ட துரைஸானியம்மாளின் முகம் ஆயாசத்தைக் காட்டியது. “போலீஸ்காரரா நீங்கள்?” என்று வியப்போடு கேட்டு நிறுத்தினாள். “நாங்கள் அப்படி ஒன்றும் துஷ்டத்தனம் செய்ய வில்லை அம்மா’ என்று பணிவாகவும் உருக்கமாகவும் கூறிக் கண்ணிர் விடுத்து அழுதுவிட்டாள் கோமளவல்லி. இருவரது குணத்தழகும் அதனால் நன்றாக வெளிப்பட்டது. மூத்தவள் பிறர்க் கடங்காத செருக்கும் பெளரஷமும் வாய்ந்தவளாய் இருந்தாள். சிறியவளோ மிருதுத் தன்மை பயம் பக்தி வாத்சல்யம் முதலிய வற்றின் வடிவமாகவே தோன்றினாள். -

கல்யாணியம்மாள் மறுபடியும் நிமிர்ந்து துரைஸானியைப் பார்த்து, “என்ன காரியம் இது? ஏன் இப்படிச் செய்தீர்கள்?” என்று முறுக்காக கேட்க, துரைஸானி சடக்கென்று உடனே மறுமொழி கூற ஆரம்பித்து, “என்ன பிரமாதக் காரியம் செய்து விட்டோம்? ஒன்றையும் காணோமே! உபயோகமற்ற சங்கதிகளுக்கெல்லாம் வீண் ஆடம்பரமாக இருக்கிறதே!” என்று கம்பத்தைப் பார்த்துக் கூறிய வண்ணம் சற்று துரத்தில் இருந்த ஒரு ஜன்னலண்டை போய், குழந்தை விளையாடுவது போல, அதன் தாழ்ப்பாளைப் பிடித்து ஆட்டிப் பார்த்துக் கொண்டு அலட்சியமாக நின்றாள்.

அதைக் கண்ட கல்யாணியம்மாள், தனது இரண்டாவது புதல்வியை நோக்கி, “கோமளவல்லி! நீயும் மற்றவரைப் போலவே மரியாதை இல்லாமல் உன்னுடைய தாயினிடத்தில் நடந்து கொள்ளப் போகிறாயா? நீயாவது ஒழுங்கான மறுமொழி சொல்லப் போகிறாயா?” என்று முன்னிலும் சிறிது சாந்தமான குரலில் கேட்டாள்.

கோமளவல்லி மிகவும் பணிவாக, “நாங்கள் வேண்டும் என்று இங்கே வரவில்லை. வீணை வாத்தியார் வருவார் வருவார் என்று உட்கார்ந்து பார்த்தோம்; வரவில்லை. நேரமாய் விட்டதாகையால் நீங்கள் தேடிக்கொண்டு வரப் போகிறீர்களே என்று நினைத்து எழுந்து நாங்களே இங்கே வந்தோம், கதவருகில் வந்தவுடன், உள்ளே அண்ணனுடைய பேச்சுக் குரல் கேட்டது. அந்தச் சமயத்தில் நாங்கள் உள்ளே வந்தால் உங்களுக்கு ஆயாசம் உண்டாகும் என்று இங்கேயே நின்றோம். இது தற்செயலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/79&oldid=649994" இலிருந்து மீள்விக்கப்பட்டது