பக்கம்:மதன கல்யாணி-1.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 மதன கல்யாணி

சொல்லி சரிப்படுத்தி இருப்பா. ரெண்டு மணிக்கு பொண்ணு பட்டணத்துலே இருந்து வங்களாவுக்கு வந்த ஒடனே, தாய்க்கிளவி இஞ்சேவந்து ஒங்களே வங்களாவுக்கு அளெச்சுக்கிட்டுப் போறேனுன்னு வாக்குக் குடுத்திருக்கறா” என்றாள்.

அதைக் கேட்ட மைனர் ஆனந்த பரவசம் அடைந்து மெய்ம் மறந்து அப்போதே சுவர்க்கபோகம் அனுபவிப்பவன் போலாய், “கட்டாயமாக வருவாளா?” என்று கேட்டான். “சத்தியமா வருவா, ரோசனை பண்ணாதீங்க, அதிருக்கட்டும். நீங்க சோறு கீறு சாப்பிட்டீங்களா இல்லியா?” என்று கருப்பாயி அன்போடு கேட்க, மைனர், “சாப்பாட்டை எல்லாம் முடித்துக் கொண்டே புறப் பட்டேன். படுத்துக் கொள்வது ஒன்றுதான் பாக்கி. வேறொன்றும் பாக்கி இல்லை” என்றான்.

கருப்பாயி:- இருந்தாலும், இம்பிட்டுத்துரம் வந்தீங்களே, சாப்பிட்டதெல்லாம் போயிருக்கும். கட்டுலுக்குக்கிளே பளம், பாலு, எளநீரு எல்லாம் கொஞ்சம் வச்சிருக்கேன். சாப்பிட்டு, வெத்தலைப் பாக்குப் போட்டுக்கினு சொகமாப் படுத்துத் துங்குங்க, சரியா ரெண்டு மணிக்கு வந்து எளுப்பறேன் - என்றாள். அதைக் கேட்ட மைனர், அவைகள் தனக்கு வேண்டாம் என்று மறுக்க, அவள் வற்புறுத்த, மைனர் அதன்பிறகு கீழே இருந்த வஸ்துக்களில் புகுந்து, இரண்டு வாழைப் பழங்கள் ஓர் இளநீர் முதலியவற்றை உட்கொண்டு தாம்பூலந் தரித்து சயனித்துக் கொண்டான். அப்போது கருப்பாயி அங்கே வந்து, “சாமி படுத்து சொகமாத் தூங்குங்க. ஆனா கொஞ்சம் கொசுக்கடி இருக்கும். விளக்கு இல்லாமெப் போனா, கொசு கடிக்காது. ஒங்க மனசு போல சேஞ்சுக்குங்க” என்றாள்.

அதைக் கேட்ட மைனர் விளக்கை அனைத்து விடும்படி அனுமதிக்க, கருப்பாயி அப்படியே தீபத்தை நிறுத்திவிட்டு, அவரைப் படுக்கச் செய்து, அவ்விடத்தை விட்டு வெளியில் போய் வாசற்கதவை மூடிக்கொண்டு திண்ணையில் படுத்தாள் உட்புறத்தில் கட்டிலில் படுத்த மைனர் மோகனாங்கியைக் குறித்து ஜெபம் செய்ய ஆரம்பித்தான். தேஜோமயமான அவளது இன்ப வடிவம், அவனது அகக்கண்ணில் காட்சி தந்து நிருத்தனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/88&oldid=650014" இலிருந்து மீள்விக்கப்பட்டது