பக்கம்:மனை ஆட்சி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

15


15 தா. உம்-இது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டே வந்தது ; கடைசி காரணம் மூவாயிரம் ரூபாய்க்கு.என் மனைவிக்கு ஒரு ரவை அட்டிகை நான் வாங்கிக் கொடுக்க மறுத்ததாம்.


மோ. நீங்கள் ஏன் வாங்கிக் கொடுக்கவில்லை ?


தா. அந்த பணத்திற்கு நான் எங்கே போவது ?-நான் என்ன கோடீஸ்வரனா?


மோ. ஆயினும், இது எனக்கு அர்த்தமாக வில்லை.-- இதற்காக அவர்கள் பட்டினி யிருப்பானேன்?


தா. இது மெளனமாய் எதிர்ப்பது-அல்லது ஒத்து உழை யாமை-இதற்கு, ஏதாவது உனக் கிஷ்டமான பெயரை வைத்துக்கொள்.


மோ. ஓ! தெரிகிறது . அதுவா சமாசாரம் -உம் !-சரி, சாஸ்திரிகளே, உங்களை நான் ஒரு கேள்வி கேட்க லாமோ ? நீங்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது நிச்சயமாய் !-நீங்கள் ஒன்றும் மறைக்காமல் எனக்கு பதில் சொல்லவேண்டும்.-சரி-இந்த ஹர்த்தால் ஆரம்ப மாகுமுன், உங்கள் மனைவி உங்களிடம் என்னைப்பற்றி ஏதாவது பேசினார்களா ?


தா. உம் - எனக்கு ஞாபகமில்லை -அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ? இதெல்லாம் அந்த வைர அட்டி கையால் விளைந்ததென்று உறுதியாக நம்புகிறேன்.


மோ. இருக்கலாம், சாஸ்திரியாராகிய நீங்கள் கூறுவது சரியாயிருக்கலாம். ஏனென்றால் சாஸ்திரிகளெல்லாம் மிகுந்த புத்திசாலிகள் ; அவர்கள் சொல்வது எப்பொ முதும் சரியாகத்தா னிருக்கும் - ஆயினும் நான் கேட்ட கேள்வி, என்னேப்பற்றி உம்மிடம் ஏதாவது பேசினார்களா, என்பது தான்-ஞாபகப் படுத்திப் பாருங்கள்.


தா. ஆம்-பேசினாள், என்று நினைக்கிறேன்-உன்னோடு கூட படங்கள் எழுதி பணத்தை செலவழிப்பதாகவும், இன்னும் இப்படிப்பட்ட பல விஷயங்களைப் பற்றியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனை_ஆட்சி.pdf/19&oldid=1413477" இலிருந்து மீள்விக்கப்பட்டது