பக்கம்:மனை ஆட்சி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

21


21 ச. எப்பொழுதும்-பிரிக்க-முடியாதம்மா.

தா. சரி-சாகவேண்டுமென்று விருப்பமிருந்தால், இந்த மாதிரியாகப் படிப்படியாகப் பாதைப்பட்டு சாகும் மார்க்கத்தை ஏன் கோரினீர்கள்? இதை அறிய இச்சைப்படுகிறேன்.

பா. இதைத் தவிர நாங்கள் வேறு என்ன செய்திருக்கக் கூடும் ?

தா. பழயகாலத்தில் ஸ்திரீகள் குளங் குட்டைகளின்மீது ஆசைப்பட்டிருந்தார்கள்.

பா. ஓ! தெரிகிறது எனக்கு இன்று இரவுகூட நாங்கள் உயிர் பிழைத்திருப்பது உங்களுக்கு இஷ்டமில்லை. அவ்வளவு அவசரமாயிருக்கிறது. உங்களுக்கு சகுந்தலா, இவர் சுகமாய் வாழ்வதற்குத் தடங்கலாக, நாம் குறுக்கே இருக்க வேண்டும் ? எழுந்திரு, வா -என்னுடன்-ஏதாவது கிணற்றில் போய் விழுந்து விடு வோம். பிறகு அவர், அவருடைய அத்யந்த சிநேகி தர்கள் -ஆண் -பெண்களுடன்-க வ லை யி ன் றி, சந்தோஷம்ாய் வாழட்டும். (பார்வதி எழுந்திருப்பது போல் பாசாங்கு செய்து, படுக்கையில் மல்லாக்காக விழுகிறாள்)

ச. அம்மா, இது பிரயோசனப்படாது.

பா. குழந்தை, நீ சொல்வது சரிதான். அன்றியும் இங்கி ருந்து கிணறு வரையில் நடந்துபோய் அதில் குதிக்க, இப்பொழுது யாருக்கு பலமிருக்கிறது உங்களுக்கு விருப்பமானால், எங்களிருவரையும் தூக்கிக்கொண்டு போய் அதில் போட்டு விடுங்கள் ! அப்பொழுதாவது நீங்கள் மிகவும் சந்தோஷமா யிருப்பீர்கள்.

தா. உம்-இன்றைக்கெல்லாம் நீங்கள் இருவரும் ஒன்றும் சாப்பிட வில்லையா !

பா. குழந்தை, நாம் கடைசியில் எப்பொழுது சாப்பிட்டோம் ?

ச. ஸ்வாமிக்குத்தான் தெரியும் அம்மா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனை_ஆட்சி.pdf/25&oldid=1415109" இலிருந்து மீள்விக்கப்பட்டது