பக்கம்:மனை ஆட்சி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

5

 6 பேசும்போது அழகான ரவை இழைத்த ஆபரணங் களின் ஞாபகம் வருகிறதெனக்கு. அப்பொழுது நீங் கள் ஒவ்வொரு மாசமும் ஒரு புதிய நகை பண்ணிக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

பா.ஒன்றல்ல, எனக்கு எத்தனை வேண்டுமோ அத்தனை, இப்பொழுதென்ன வென்றால் நாம் அதற்காகக் கெஞ்சி உதை வாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது.


ச.ஆமாம், நீங்கள் இவ்வாறு, எவ்வளவு லங்கணம் போட் டாலும், அப்பா பிடிவாதமாயிருந்து, விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று ஸ்திரமாயிருந்தாலோ ?

பா.அவரால் அப்படியிருக்க முடியாது. அவர் அப்படிச் செய்யவும் மாட்டார். அவரை எனக்குத் தெரியாதா என்ன ? ஆடவர்களெல்லாம் கோழை மனதுடை யோர்கள் தானே. நாம் பட்டினியால் சாகப்போகி றோமென்று பாசாங்கு செய்தால், அவர் எல்லாம் குரியாக வழிக்கு வந்து விடுவார்.


ச.ஒருவேளை அவர், நீங்கள் உண்மையில் பட்டினியாக வில்லை பாசாங்கு செய்கிறீர்களென்று கண்டு பிடித்து விட்டாலோ ?

பா.யார் சொல்கிறது நாம் பட்டினியா யில்லையென்று ? நாம் இந்த மூன்று நாட்களாகப் பட்டினியாயில்லையா? வீட்டில் ஏதாவது சமைத்து சாப்பிட்டோமா?


ச.அது என்னவோ வாஸ்தவம்தான்? தினம், ஒருடஜன் டம்ளர் காப்பி கொகோ, கொஞ்சம் நாஸ்தாக்கள், மூன்று நான்கு மத்யான போஜனம், ராத்திரியில் ஒன் றிரண்டு விருந்து சாப்பாடு, அவ்வளவுதான் இம்மா திரி பட்டினியாயிருப்பது எவ்வளவு கஷ்டம் !


பா.இதோ பார் பெண்ணே இந்த குடும்பத்திற்கு அவ மானம் கொண்டுவர, ஏனோ இதில் பெண்ணாய்ப் பிறந்தாய் ? உன் தகப்பனாரிடம் என்னைக் காட்டிக் கொடுக் கப் பார்க்கிறாயென்று, எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. இந்த மாதிரியான கெட்ட எண்ணங் களுக்காகத் தான் ஸ்வாமி உன்னை இளவயதிலேயே விதவை யாக்கினார் -என்ன வாகிலும் செய்யப் போகிறாய் பத்திரம் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனை_ஆட்சி.pdf/9&oldid=1412981" இலிருந்து மீள்விக்கப்பட்டது