பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

98

வண்டி கண்ணுக்கு மறைகிறவரை பார்த்துக் கொண்டிருந்த பொன்னி, எஜமான் கூறியபடி வைத்தியரையும் அழைத்துக் கொண்டு தன்னு: டைய வீட்டை நோக்கிப் புறப்பட்டாள். வழி முழுவதும், அவள்மனம், தன் புருஷனைவிட, அந்தக் குழந்தையைப் பற்றியே பெரிதும்கவலைப் பட்டுக் கொண்டிருந்தது.

10

“எந்த நாட்டிலும், எந்தக் காலத்திலும் மனிதர்களைக் கொல்வதற்குக் கண்டுபிடித்த வற்றுள், மிகவும் கொடுரமான திறைமையான

கருவி மது."

-ஜான்ரஸ்கின்

பொழுது விடிந்ததும், ஆறுமுகத்திற்கு ஒவ்வொன்றும் நன்றாகவே நினைவிற்கு வந்தது. ஒட்டமும், நடையுமாகத் தன் நண்பன் ராமன் வீட்டை அடைந்தான். அங்கே தலையில் ஒரு கட்டுடன், கயிற்றுக் கட்டிலில் ராமன் படுத்திருந் தான். ஆறுமுகம் மெளனமாக வந்து ராமனின் கட்டிலின் அருகே தரையில் உட்கார்ந்து கொண்டான். -

சிறிது நேரம் யாரும் எதுவும் பேசிக் கொள்ள

வில்லை. தலைமாட்டில் உட்கார்ந்திருக்கும் ஆறு н,