பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

24

    • ஆமாங்க. நஷ்டம் கொஞ்சம் அதிகம் தானுங்க’’ என்று ஆறுமுகம் கூறிக் கொண்டிருக் கும்போதே குறுக்கிட்ட பலவேசம் பிள்ளை வெறுப் போடு, கூடச் சேர்ந்து ஆமோதிக்கறிங்களாக்கும். ஏண்டா, மரத்துக்கும், மனுஷனுக்கும் கூட வித்தி யாசம் தெரியாத அளவுக்கு அப்படி ஒரு குடியா கேக்குது?’ என்று பலவேசம் கேட்கும் போது ஆறுமுகம் இடைமறித்துக் கூறினான்:

'நான் பாதியிலேயே, உஷா ராயிட்டேங்க. மன்னார் கிட்டேச் சொன்னேன், டேய் இதெல் லாம் வாழைங்கடா, ஆளுங்க இல்லே போலிருக் குன்னு. ஆனா இந்த மன்னாருதான், 'சீ... போடா மட்டி; குடிச்சிட்டு உளற்றியா; ஒவ்வொருத் தனும் தலையிலே முண்டாசையும் கட்டிக்கிட்டு, தடிதடியா கையை நீட்டி மறிக்கறது. புரியல்லே? சீவுங்கடா இவங்க கழுத்தையெல்லாம்,’’ன்னு கத்திக்கினே, சீவித் தள்ளிப்புட்டான்,' என் றான்.

இதையெல்லாம் கேட்கக் கேட்க, பலவேசம் பிள்ளைக்கு ஒருபுறம் கோபமாகவும், மறுபக்கம் பரிதாபமாகவும் இருந்தது.

  • சரி...சரி வாயை மூடுடா, நீயும், உன் மன் னாரும். வெட்கமாயில்லே இதையெல்லாம் இப் போச் சொல்லறப்போ. நீங்க பண்ணியிருக்கிற அட்டகாாத்துக்கு சேர்வை என்ன செய்யறதா இருந்தாருன்னு தெரியுமா?’’