பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

40

வரும் அதுவே சரியென்று ஒப்புக் கொண்டு விட்டனர்.

4

'மனைவியின் அன்பை வேதனையாக மாற் றவும்; அவளுடைய பெருமையை அவமானச் சின்னமாக்கிச் சிதைக்கவும் மதுவினால் மட்டுமே

முடியும்."

-ஹென்றி கிராடி

கிராமத்தை விட்டுச் சற்று ஒதுங்கினாற் போல், இடும்பன் மலைச்சாரலில் ஒரு நிழலான இடத்தில் அந்த மதுக் கடை அமைந்திருந்தது. அருகிலுள்ள ஆத்தூர் கிராமத்திற்கும், அதைக் கடந்துள்ள, அல்லது சுற்று வட்ட ரத்திலுள்ள குப்பங்களுக்குமே அந்தக் கடைதான் சென்டர்!

மதுக் கடையின் உரிமையாளரும், நிர்வாகி யுமான காடையன், தன்னுடைய கடையை ஒரு ஐந்து நட்சத்திர அஸ்தஸ்துக்கு உயர்த்தியிருந் தான். பொட்டல் வெளியில் விசாலமான பந்தல் போட்டு, பெரிய மனிதர்கள், ரகசியமாக வந்து மற்றவர்கள் கண்ணில் படாமல் குடித்துவிட்டுப் போவதற்கு வசதியாக ஒதுப்புறமான ஒரு ஒலைக் குடிசை. பார்ப்பதற்கு குடிசையாகக் காட்சியளித் தாலும், அதனுள், வழவழப்பான மேஜை நாற்காலிகளும், மின்சார விளக்கும், பூப்போட்ட கண்ணாடிதம்ளர்களும், அவர்களை விசேஷமாகக் கவனிக்கவென்று மங்கம்மாவையும் காடையன் நியமித்திருந்தான்.