பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

55

'இந்தாங்கய்யா - ஆம்பிளே, பொம்பிளே எல்லோருக்கும் சேர்த்துத் தான் சொல்லறேன். உங்க குடும்பச் சண்டையை எல்லாம் வீட்டிலே போய் வைச்சுக்குங்க; இங்கே வேணாம். என் கடை முன்னாலெ எந்தப் பெண்டுகள் மேலேயும் யாரும் கை வைக்கக் கூடாது’’

அனைவரையும் சமாதானம் பண்ணுகிற பாணியில்; காசைப் பறித்து அன்றைய வியா பாரத்தை முடித்துக் கொண்டு விட்ட திருப்தியில் பேசுகிற கள்ளுக் கடைக் காரனுடைய பேச்சு, பொன்னியின் கோபத்தைக் கி ள றி விட்டு விட்டது.

'இந்தாய்யா, குரங்கு மத்தியஸ்தம் பண்ண றியா! இப்போ இங்கே நீ பார்த்தது எங்க குடும்பச் சண்டையா. உப்புக்கும் பு னி க் கு மா அடிச் சுக்கறோம். மரியாதையா இப்போ, இவங்க கிட்டேருந்து நீ வாங்கிக்கிட்ட காசையெல்லாம் கணக்கும் பண்ணி அவங்க அவங்க கையிலே கொடுக்காட்டி நாங்க இ ங் கி ரு ந் து போக மாட்டோம்.

'நான் என்ன அவங்க மடியைப் பிடிச்சு இழுத்தா காசைப் பறிச்சுக்கிட்டேன்; நீ என் னமோ புதிசாக் கதை விடறியே. - அப்போ இவங்க குடிச்ச கள்ளுக்கெல்லாம் யாரு பணம் தகுவா!’’