பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

57

பூவாயி சட்டென்று பொன்னியின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு, 'அக்கா... நாம. இங்கே சண்டை போடவா வந்திருக்கோம்? நம்ம எஜமான் சொல்லி அனுப்பிச்சதை மறந்துட் டியா?? என்று அவளிடம் மெதுவாகச் சொல்லி விட்டு காடையனைப் பார்த்து நின்று கொண்டு நிதானமாகக் கேட்டாள். ஏங்க சர்க்கார்லே, லைசென்ஸ் வாங்கி கள்ளுக்கடை வெச்சிருக்கிற தாச் சொன்னிங்க...

"ஆமாம். இப்பவும் அதத்தான் சொல்ல றேன். கடைகிட்டே வம்புக்கு வந்தா போலீசைக் கூப்பிடுவேன்.??

'நாங்க வம்புக்கோ வழக்குக்கோ இங்கே வல்லிய்யா. நீங்கதான் சொல்லிப்பிட்டீங்களேகுடிச்சுக் குடிச்சு எங்க ஆம்பிளைங்க சாகறதுக் கும்; தாலியறந்து எங்களையும், எங்க பிள்ளை குட்டிகளையும், தெருத் தெருவா பிச்சை எடுத்து, நாயா அலையவிடறதுக்கும் நீ ங் க தா ன் கவர்மெண்ட் கிட்டேயிருந்தே லைசென்ஸ் வாங். கிப்பிட்டீங்களே.

ஆன... உங்களை ஒன்னு கேக்கறேன்; உங்க ளுக்கும் பெண்டாட்டி பிள்ளைகுட்டிங்க இருக்கும். காரை விடு கூட வாங்கியிருப்பீங்க. ஆனா... நாங்க இத்தினி பேரும் மண் குடிசைலே தான் வாழறோம். அதுக்குக் கூட குடக் கூலி கொடுக்க முடியாயே; பாதிப்பேரு மரத்தடியிலேவரழறவங்க.