பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

59

கடை வையுங்ாகா; இந்த ஊரே உங்ககிட்டே வந்து வாங்கும். ஒரு வட்டிக் கடை வையுங்க; தாலியைக்கூட சந்தோஷமா உங்ககிட்டேக் கழட் டிக் கொடுப்போம். ஆனா... இந்தக் கள்ளுக் கடையை மட்டும் நீங்க மூடிடுங்க..’’ என்று பூவாயி கூறி முடிப்பதற்குள் காடையனுக்கு எங்கி ருந்தோ அப்படியொரு கோபம் வந்துவிட்டது.

'ஒ.கோ அத்தெப்பேசி...இத்தப் பேசி... கடைசியிலே.. என் தலைமேலேயே கையை வைக்கப் பாக்கறிங்களா அதுக்குத்தான் இப்படிப் படை திரட்டிக்கிட்டு வட்திருக்கீங்கன்னு இப் பல்லே புரியுது,’’ என்று உாக்கக் கத்தியவன், 'ரா.மு...ரா.மு.’’ என்று கடைப்பக்கம் திரும்பிக் கூப்பிடவுமே, ஒரு பொடிப்பையன் ஓடிவந்து அவன்முன் நின்றான்.

காடையன் அவ்னிடம், சிக்கிரமா ஓடிப் போயி; அவுட்போஸ்ட்லே இருக்கிற, இன் ஸ்பெக் டர் ஐயா கிட்டே அவசரமா தாலு போலீசு காரங் களை அனுப்பச் சொல்லு...ஒடு...' என்று உத்தர விட்டான்.

இதைக்கண்ட பொன்னி கொதித்தெழுந்தாள்.

'ஏன் ஐயா... போலீசுக்கா ஆள அனுப்பறே. நாங்க என்ன உன் கடையிலே வந்து திருடி னோமா; உன் வீட்டிலே வந்து கொள்ளை அடிச்சோமா?