பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75

75

இதைத்தாண்டா பக்கிரி, என்னாலே தாங்கவே

மூடியல்லே. கோவத்திலே அவரு,பத்து அ டிஅடிச் இருந்தாக்கூடத் தேவலாம்போலத் தோணிச்சு,’ என்றான் ஆறுமுகம்.

உடனே தொப்பளான் குறுக்கிட்டு , "அண்ணே! இதையெல்லாம் நீ நம்பறயா? அண்ணே, இதெல் லாம் வெறும் வேசம். உன்னை அவரு கை நீட்டி அடிச்சா, அவரும் போலீசுக்கு பதில் சொல்லி ஆவனும் இல்லே; அதுனாலே, உன்னை விடற மாதிரி வுட்டுட்டு, நம்ம அத்தினி பேரை யுமே, போலிசிலே மாட்டி வுடத்தான் இப்படி சூழ்ச்சி பண்ணி இருக்காரு. பாத்துக்கிட்டே இரு; மதியத் துக்குள்ளாரே போலீசுப் பட்டாளம் நம்ம குப்பத் தைச் சூழ்ந்துக்கப் போவுது’’ என்று பயந்து நடுங்கிய படியே கூறினான்.

தொளப்பானுடைய இந்த வார்த்தைகளைக் கேட்டதும், மற்றவர்களையும் போலீஸ் பயம் பற்றிக் கொண்டு விட்டதுபோல, எல்லோரும் ஏக காலத்தில் கூறினார்கள்.

  • அண்ணே ; நீ இப்படிக் காரியத்தைக் கோட்டைவிட்டுட்டு வந்திட்டியே. உன்னாலே இப்போ நாங்க எல்லாம் கூண்டோடு மாட்டிக்கப் பேசறோம்.?

ஆறுமுகத்திற்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது. அட, தொடை நடுங்கிங்களா! அப்ப