பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

89

‘நான் அப்பாரு வந்தப் புறமா; அவருகூடத் தான் துாங்கப் போறேன்’ என்று ஒரு தீர்மானம் போல் கூறிவிட்டு, தாயாரின் பக்கத்திலேயே உட் கார்ந்து விட்டாள்.

கண்ணம்மா அவர்களுக்கு ஒரே மகள். செல் லப்பெண். பாவி, புள்ளையைக் கூடப் பார்க்க வராமே, ரெண்டு நாளாக் குடிச்சிட்டு, எங்கயோ விழுந்து கிடக்கானே? -

நினைக்க நினைக்க அவளுக்குத் துக்கமாக வந்தது. சாப்பிட்டதாகப் பெயர் பண்ணிவிட்டு, அவசரமாக அடுப்பங்கரைக் காரியங்களை முடித்துக் கொண்டிருந்தபோது, வாசல் கதவை யாரோ படபடவென்று தட்டுகிற சப்தம் கேட்டது.

'அம்மா அப்பாரு வந்துட்டாரு! - என்று கண்ணம்மா ஜோசியம் சொன்னாள்.

'இரு நான் போயிப் பார்க்கறேன்”, என்று அவள் கைகழுவி விட்டு வருவதற்குள், கழியால் யாரோ கதவை ஓங்கித் தட்டிக் கொண்டே இருந் தார்கள். யாரு?’ என்று கேட்டாள் பதில் இல்லை. ■ -

கதவைத் திறந்தபோது, தாயை முந்திக் கொண்டு மகள் முன்னே போய் நின்றாள். அங்கே