பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93

93

தான். ஐயோ... அதப் பார்க்கப் பார்க்க, என் பூவும், பொட்டும் போயிடுமோன் னு பயமாயிருக்கே அக்கா. அதச் சொல்லத்தானே அக்கா நான் இப்போ ஓடோடி உன் வீட்டுக்கு வந்தேன்’’ என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே ஆறு முகம் - அலட்சியமாகக் குறுக்கிட்டு கேட்டான்.

  • என்னடி மாத்தி மாத்தி சினுக்” பண்ணு lங்க? பலவேசம் எத்தினி பேருக்குடி புருஷன். ராமனெ எனக்குத் தெரியாது? கள்ளுக் கடை இல்லேன்னு அவன் தானே எனக்குச் சாராயமே வாங்கிக் கொடுத்தான். அவனையா எனக்குத் தெரியாது? .

எ ன் உயிர் தோழன்டி அவன். பெண்டாட்டி கொலிசை, அவளுக்குத் தெரியமெ எடுத்து வித்து எனக்குச் சரக்கு வாங்கிக் கொடுத்த உத்தமண்டி அவன். அவனைப் பத்திப் பேச உங்களுக்கு ரோக்கிதை ஏதுடி!’’

ஆறுமுகத்தின் உளறலின் மூலம் பொன்னிக் குப் புரியாதிருந்த ஒன்று புரிந்தது . அது - தனக்குத் தெரியாமல், தன் புருஷனே வீட்டி லிருந்து தன்னுடைய வெள்ளிக் கொலுசைத் திருடிச் சென்று விட்டான் என்பதுதான்.

எவ்வளவோ கஷ்டங்களுக்கு மத்தியில் தன் னுடைய அம்மா ஆசை ஆசையாய்ச் செய்து