பக்கம்:மீனோட்டம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$62 மீனோட்டம் காத்திருப்பது என்றால் என்ன? இங்கு இத்தனை அழகும், அங்கு அத்தனை செளகரிய மும், ஒன்றுடன் ஒன்று ஒன்றா ஏங்கி, வரட்டு கர்வத்தில் வியர்த்தமாகப் போவதுதானா? கப்பல்களைக் கவிழ்த்த கதைகளைத் தன்னுள் அடக்கிய அந்த மூக்குத்தி உண்மையில் கல்யாணமாகாமல் காத்திருக் கும் கன்னிகளின் ஏக்கம் ஒன்று திரண்ட கண்ணிர்ச் சொட்டு. வீம்புத் தவம், வீண் தவத்தில் ஒருவருக்கொருவர் ஏன் அரண் கட்டிக் கொண்டேயிருக்கிறீர்கள்? ஏன்? அர்ச்சகர் அலங்காரம் செய்யத் திரையை இழுத்து விட்டார். "ஏனாகவே அவள் அதன்பின் மறைந்து போனாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/103&oldid=870182" இலிருந்து மீள்விக்கப்பட்டது