பக்கம்:மீனோட்டம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鬣6 மீனோட்டம் அம்மா இல்லாவிடில் அவன் கதி என்னவோ அம்மாதிரி தான், அவனில்லாவிடில் அம்மாவுக்கும். ஏதோ வாசலில் போகும் சனியை விலைக்கு வாங்கிக் கட்டிக் கொண்டாற் போல் அவனுக்குக் கவியானம் நடந்ததிலே யிருந்து, குடும்பமே இரண்டு வருஷ காலமாய் உளைசல் பட்டுக் கொண்டிருந்தது. அதனால் இருவருக்கும் சில சச்சரவுகள் ஏற்பட்டபோதிலும், அவன் குடும்பத்துக்கு நடுமரமாய் இருந் தால், அவள் அதன் ஆணிவேர்; அவன் ஆணி வேரானால் அதை வளர்க்கும் மண் அவள். இப்பொழுது இம்மாதிரி அவன் கொல்லைப்புறக் குறட்டில் குந்தி உட்கார்ந்து கொண்டு பல் விளக்குகையில், அவன் மனைவி இச்சமயம் என்ன பண்ணிக் கொண்டிருப்பாள் எனும் சிற்றாவலில் மனம் சிந்தித்து நின்றது. என்ன பண்ணிக் கொண்டிருந்தால் என்ன? அவனுக்கென்ன ஆயிற்று!... இதோ அவன் தாய் தள்ளாத வயதில், அவள் பிள்ளையும் மருமகளும் பெட்டியில் வைத்துக் காப்பாற்றுவது போல் தாங்க வேண்டிய நாளில், இன்னும், இவ் வீட்டிற்கு அவன் தகப்பனாருக்கு வாழ்க்கைப் பட்ட நாளில் வந்து புகுந்து ஓடி யாடி வேலை செய்த மருமகளாகவே தான் விளங்குகிறாள். ஒடத்தான் முடியவில்லை; ஆடத்தான் முடியவில்லை. ஆனால், வேலையில்லாமல் போய் விடுகிறதோ வயதாகி விட்டாலும், அஞ்சு பெற்றுவிட்டாலும், அகமுடையான் போய் விட்டாலும்?... நிம்மதியாய்த் துரங்கிக் கொண்டிருப்பான். சிறு குழந்தை யைப் போல் சற்று மலர்ந்த உதடுகளுடன். அவளே தான் அவ்னிடம் சொல்லியிருக்கிறாளே! நான் எங்காத்துக்குச் சேல்லப் பெண்; ஏழு மணி வரையில் தூங்குவேன். என் காப்பின்ப்பவும் சுட வெச்ச காப்பிதான். அவள் அம்மாதிரி துங்குவதைப் பற்றியோ, துரங்கியே வளர்ந்ததைப் பற்றியோ ஒரு சிறு சிலச்சையும் கூடப்பட்டது கிடையாது. வந்த இடத்துக்குத் தகுந்தாற் போல் பழக்க வழக்கங்களைத் திருத்திக் கொள்ள வேண்டுமென்று முயன்றதும் கிடையாது. மொத்தத் கில் அவள் எண்ணங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/107&oldid=870189" இலிருந்து மீள்விக்கப்பட்டது