பக்கம்:மீனோட்டம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி #1 அறைக் கதவை மூடியதும் புலன்களுக்கு இதமாய், சாஹஸ்மான இருள்; தலைக்குமேல் மின் விசிறியின் குளு குளு'ச் சுழல், சுவர்களை அடைத்த அலமாரிகள் நிறைந்து இருக்கைகளின் மேல், தரையில், என்னைச் சூழ வழியும் புத்தகங்கள். ரேடியோகிராமில் அடக்கமாய் அஜ்மல்கான் விதாரில் தர்பாரிகானடா; அல்லது ஸெய்கேலின் 'துக்குக்கே... பொறி கண்ணுக்குப் படாது மணம் மட்டும் கமழும் மகிழம்பூ ஊதுவத்தி, எதிர்வீட்டில் டான்ஸ்மாஸ்டர் கட்டை, தரைமேல் டக்டக் அதற்கு ஏற்ப ஜல் ஜல் கால் சதங்கையொலி இந்த பகைப்புலனில், நெஞ்சத்தணலில் புகைந்து எழும்பி உருக்கொளும் எண்ணங்கள், சிந்தனை, தியானம்...... அவசரமாய்க் கதவுத் தட்டல், எழுந்து திறக்கும் வரை யார் விடுகிறார்கள்? தாழ்ப்பாளோ லொடலொட்டை, படீரெனக் கதவு திறந்து கொள்கிறது. குடும்பமே உள்ளே அலை மோதுகிறது. கடைக்குட்டி வந்து மடியில் பொத்தென விழுந்து நாய்க்குட்டிபோல் முகத்தை அடிவயிற்றுள் தேய்க் கிறான். மூக்குச்சளி ஈரம் சட்டையைத் தாண்டி சதை நனை கிறது. 'அப்பா! அப்பா!! யார் வந்திருக்கிறது பாருங்கோ! ஒரே கத்தலில் ஏகக் குரல்கள். 'காலேஜ் மூடிட்டாளாம், ஸ்ட்ரைக்காம். ஹாஸ்டலில் கலாட்டா-அடிதடியாம்!” பின்னால் ஒரு உருவம் வாசற்படியில் லஜ்ஜையில், அரை புன்னகையுடன் தயங்கி நிற்கிறது. சேகர் நாளுக்கு நாள் உயரமாகிக் கொண்டே வருகிறான். உயருவது ஒரு வியாதி போல். இப்பவே அவனை நான் நிமிர்ந்துதான் பார்க்கி றேன். தோளுக்கு மிஞ்சினால் தோழன். தலைக்கு மிஞ்சினால்? வெள்ளம் என்று விட்டு விட வேண்டியது தானா? "அப்பா! அப்பா!! நான் 500க்கு 438. நான்தான் algıltı?å &l 16iv . Opgavų áærs · Posseidon Adventure' பிராமிஸ் பண்ணியிருக்கேள். ஞாபகமிருக்கா? சேகர் வேறே ஊரிலேருந்து வந்திருக்கான். குடும்பத்தோடு போக லாம்பா!' இந்த வாரமே தூக்கிடறானாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/12&oldid=870215" இலிருந்து மீள்விக்கப்பட்டது