பக்கம்:மீனோட்டம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயர் #39 "என்ன ஐயா அது? இன்னிக் காலையில்தான் பொடிக்கு காசில்லேன்னு மூக்கால் அழுதேள்...? ஐயா கத்திரிக்காயை நறுக்க ஆரம்பிச்சாச்சு. எப்பவும் இடுப்பில் செருகிய வாழைப்பட்டைக் கத்தி. துண்டிக்காமல் அடிவரை நாலாய்ப் பிளந்து-குட்டி குட்டியா-குண்டுகுண்டா குழந்தை கத்திரிக்காய். மருந்துக்கு ஒரு விரை? ஊஹாம். வெண்ணெய், வெண்ணெய். மன்னி, குழம்பு உருளியை அடுப்பில் போடு ஊம். சுருக்க மஞ்சள் பொடியைக் கொஞ்சம் கூடவே போடு. காய் வேக ஆரம்பிச்சு நிறம் மாறினதும் அதுக்கே அதன் அடையாளம் தெரியாது. அப்புறம் உனக்கென்ன? வாசல் கதவை மட்டும் சத்தே ஒருக்களி...' அது உருளியல்ல. கிட்டத்தட்ட ஒரு சின்ன அண்டா. குடும்பமும் பெரிசு. கொஞ்சநேரத்தில் குழம்பு காய்கை யிலேயே வாசனை கூடத்தைத் துரக்கும். பருப்பா, மண்ணாங் கட்டியா? எல்லாம் மன்னியின் கை வாலம் தான் வேளை பொழுது இல்லாத எங்கள் ஒயாப் பசிதான். இழுத்துக் கட்டிப்பிடித்த இந்த வயிறுக்கு எப்போதேனும் விடுதலை வேண்டாமா? ஏதோ ஒரு நியாயம் தானே தன்னை இந்த சமயம் செலுத்திக் கொள்வதாகவே எங்களுக்குத் தோன் றிற்று. வயிற்றின் நியாயம். எல்லாரும் ஓர் இழு இழுப்போம், ஆமாம்! மன்னியும், மற்ற பெண்டுகளும் சேர்ந்துதான். அதுவும் எங்கள் அத்தைப் பாட்டி ஒரு காலை நீட்டியபடி வெறும் குழம்பைத் தேனாட்டம் உள்ளங்கையில் சொட்டிக் கொண்டு-நாக்கை ஒவ்வொரு தடவையும் டொக்டொக் கென்று கொட்டிக் கொண்டு, உள் தொண்டைவரை இழுப்பது இன்னும் நினை விருக்கிறது. ‘'தேவாமிருதம்! தேவாமிருதம்!” பண்ணின அரைமணியில் அண்டா-இல்லை உருளிஇல்லை ஆண்டா சரி-என்னவோ காலி. எங்கள் பாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/140&oldid=870260" இலிருந்து மீள்விக்கப்பட்டது