பக்கம்:மீனோட்டம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 மீனோட்டம் மூணு கலை முறையா கேட்குது. இதுவரை யார் கண்ணுக்கும் பட்டதில்லை. இதுவரை யாரையும் கடிச்சு பழிக்கு ஆளான தில்லே. அது பாட்டுக்கு வரது. போறது. உன்னை என்ன பண்றது?) கொல்லையில் தென்னங்கன்றின் உச்சியில் அதென்ன **டொக் டொக்?’’ வைக்கோல் போர் மேல் யாரோ குதிச்ச மாதிரி பொத்” துனு சத்தம் கேட்டுதா? அக்ரகாரம், பேர் தான் பெரிசு. ஒரே சாரி, எண்ணி நாலு வீடு. எதிர்ச்சாரியின் பெருமாள் கோவில் மதில் முதல்வீடு கிலம், வாசலும் உள்ளும் நுண படர்ந்து சிலந்தியும் ஒட்டடையும் தான் வாசம், அடுத்தது தன் வீடு. மேலண்டை வீட்டைக் கழுகாய்க் காத்துக் கொண்டிருந்த தொண்டு கிழத்தை எடுத்துப் போய் ஆறு தாண்டி-ஆறாம் ஆறு அதென்ன ஆறோ, பேறு தான் ஆறு என் நினைப்பு தெரிஞ்சு நானும் ஆளாகு முன்னே எட்டு வயசிலே தாலியைக் கட்டினார். இங்கே வந்தாச்சு, இப்போ எனக்கு வயது நாற்பதா, நாற்பத்திரெண்டா, எண்ணிக்கை கூட மறந்து போச்சு-என் நினைப்பிலே தண்ணி ஒடினதா ஞாபகமில்லே-ஆறு தாண்டி புளிய மரத்திலே பொசுக்கி யாச்சு. சொல்லியனுப்பி, கொள்ளி வைக்க வந்த புள்ளி அடுத்தநாள் சாம்பலைக் கிளர நிக்கல்லே, செத்தவர் சொத்து, குருவிக்காரன் குடுகுடுப்பைக்குக்கூட எடுபடா துன்னு கண்டதும் கிழவியை வாய்க்கு வந்தபடி திட்டிட்டு ராவோடு ராவாக் கிளம்பிப் போயாச்சு. பாலில் குளிராத ஆவி இன்னும் அந்த வீட்டைச் சுத்திண்டுதான் இருக்கு, இல்லாட்டா திடீர் திடீர்னு ஏது அந்த முக்கல், முனகல், பெருமூச்சு, விசிப்பு பக்கத்து வீட்டுச் சுவர் பின்னாலிருந்து? கோடி வீட்டில் அடிக்கடி குடிமாற்றம் ஒரு சமயம் பள்ளிக்கூடத்தின் புது வாத்தியார். இன்னொரு சமயம் தண்ணீர்ப் பந்தல். தயிர் சாதம். மசால் வடை, சுண்டல், வடைகறி ' (உன் துட்டு எங்கே போவது நாளைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/149&oldid=870277" இலிருந்து மீள்விக்கப்பட்டது