பக்கம்:மீனோட்டம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காசி 163 கண்டுபிடிக்க முடியவில்லை. அன்று முழுக்கத் திட்டிய வெசவுகளுக்கெல்லாம் ஒரே பதில் ஒரு அசட்டுச் சிரிப்பு. ஆனால் அந்தச் சிரிப்பில் உண்மையில் அசடும் இல்லை. ஆனால் காசி ஒற்றை நாடிதான், குருவிபோல் சோற்றைக் கொறித்தான் என்றாலும், எவ்வளவு ஊட்டம் கொடுத்தா லும் சதை பற்றாது. அந்த உடம்பு வாகு அப்படி இரவில் குத்து விளக்குச் சுடர் காட்டும் நிழலாட்டத்தில் அந்த முகத்தில் சதை மறைந்து வெளிப்படும் வெறும் முகக் கோட்டினுள் விழிகள் மட்டும் பற்றி எரிகையில் அவளுக்குச் சில சமயங்களில் பயமாவேயிருந்தது. தான் பார்ப்பது உட் கார்ந்த நிலையில், உயிர் பிரிந்த சவமா? அல்ல தான் புகுவதற்குத் தக்க சடலம் தேடிக் காத்திருக்கும் ஆவியா?

  • காசி, உன் முழுப் பேர் என்ன?” 'எனக்கே தெரியாது.” 'உன் பேரே உனக்குத் தெரியாதா, நீ என்ன ஆளப்பா!'

'வாஸ்தவமா, அப்படித்தான் என்னை வளர்த்தவர்கள் என்னை காசியில் அவர்கள் தங்கிய மடத்தில் பத்து நாள் குழந்தையாக ஒரு கந்தைத் துணியில் சுற்றின மூட்டையில் கண்டெடுத்தார்களாம். அதே சாக்கில் என்னைக் காசி யென்று அழைப்பார்கள். அதுதான் எனக்குத் தெரியும்: 'காசிக்குப்போயும் அவர்களுக்கு கர்மம் தொல்ையலை யாக்கும்?’ என்றாள் அவள். காசி புன்னகை புரிந்தான். “கர்மத்தை அவர்களல்லவா தேடிக் கொண்டார்கள்! என்னைக் கண்டதால் அவர்கள் கொண்டு வரணுமா? அவர் கள் அப்படி ஆரம்பித்து வைத்த தர்ம சங்கிலியின் கோர்வை யாகத் தானே உங்கள் கணவர் என்னைக் கோவிலில் மறுபடியும் கண்டெடுத்து வந்தார்! இல்லாவிட்டால், காசி யிலேயே நான் வேறு யாரேனும் எடுப்பார் கைப்பிள்ளையாக வளர்ந்து கங்கா நதியில் யாத்ரிகள் வீசியெறியும் காசை மூழ்கி எடுத்துக் கொண்டிருப்பேனோ, அல்லது என்னைச் சுற்றி யிருந்த கந்தைத் துணியிலேயே விர்ைத்துப் போய்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/164&oldid=870307" இலிருந்து மீள்விக்கப்பட்டது