பக்கம்:மீனோட்டம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

萄r鄧 169 என் கால் கல்லாலடித்துப் போட்டாற்போல் ஆகி. விட்டது. அவனும் நகரவில்லை, நாங்கள் மெளனமாய், அவளையே கவனித்துக் கொண்டிருந்தோம். ஒருவாறு குமட்டல் அடங்கி எழுந்து திரும்பி எங்களை நோக்கி வருகையிலேயே, அவள் முகத்தில் தெரிந்த வேதனை, திகைப்பு, பயம், ஆச்சரியம் இவை யாவற்றின் பின்னணியில் விசிறி விரித்தாற் போல் ஒரு கோபம் உதய மாவது கண்டேன். அவள் நெற்றியில் அது ஆரம்பித்து, வியாபித்து, முகம்பூரா, கழுத்துவரை குங்குமம் குழம்பிற்று, அவள் உடல் கிடுகிடென ஆடிற்று. அவள் கைகள் முஷ்டித்தன. - காளி. எனக்கு உடல் வெலவெலத்து விட்டது. போ! போயிடு!! உடனே போயிடு!!!” குரல் அடங்கித்தான் ஒலித்தது. ஆனால் அந்த அமுக் கிய எஃகுச் சுருள் விசிறிவிட்டால் மொக்குமோறை காலி. காசி அவளை வியப்புடன் நோக்கினான். அவளைப் பார்க்கவில்லை. அவளில், அவளைக் கவ்விக் கொண்டிருக் கும் சீற்றத்தில், ஏதோ இதுகாறும் நினைவடியில் புதைந்து போன், அல்லது இதுகாறும் அவன் தேடிக் கொண்டிருந்த ஏதோ உருவத்தை அடையாளம் கண்டு கொண்டாற் போல் அவ்விழிகளில் ஒரு ஆச்சரியம் உள்நினைவின் திடும் ஆரிப்பு. உடனே அலரிப்பு. அவன் உள்கட்டடத்தின் கட்டவிழ்தலைக் கண்கடாகக் காண முடிந்தது. - காசி பேசவேயில்லே. காசிக்கு என்ன நேர்ந்து விட்டது? தலைகீழாய்த் தூக்கிப் பிடித்த பாம்பு போல் காசி திடீரெனப் போலிவிழந்து போனான். நீர்த்தே போனான். பறவையைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டான். அவன் அதன் சடலத்தைத் தாங்குவது போல் இல்லை. ஏதோ சகுண்த்தைத் தூக்கிக் கொண்டவன் போலிருந்தது. அஆன் பிறப்பித்த சகுணத்தை அவனே சுமந்து கொண்டு மீ-11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/170&oldid=870322" இலிருந்து மீள்விக்கப்பட்டது