பக்கம்:மீனோட்டம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி 2} ணும்னா அவள் லேசுப்பட்ட ஆசாமியில்லை. பெத்த பாசமும் மீறி அவள் கஷ்டம் என்னமோ? ஆமாம் என்னன்னு உனக்கும் தெரியாது. எனக்கும் தெரியாதல்லவா? உன் வாயில் விரலை வெச்சால் கடிக்கத் தெரியா தோன்னோ? பாலைக்கண்டால் குடிக்கமாட்டையோன்னோ? "ஏன் மாட்டேன்? விரலையும் பாலையும்தான் வெச்சுப் பாரேன்!” பின் என்ன? பேச்சுலே கண்ணாமூச்சி விளையாடிண்டு? இப்படிப் பேசினால் உனக்குப் பதவியேதாவது கிடைச் சுட்டதா எண்ணமா? இதோ, பார் ஒண்னு சொல்றேன். இதுதான் எல்லாக் கேள்விகளுக் ம் ஒரே பதில். நாம் எல்லாம் சுரனை கெட்ட ஜன்கங்கள். ராச்சாப்பாட்டை விட, நமக்கு மத்தியான டி.பன்தான் தேவை. அடை தோசை, உணக்கையா எண்ணெய் மிளகாய்ப்பொடி ரோசமில்லாமல் இருக்கறதால்தான் உலகம் நடக்கறது. அவள் நெருப்பு. நெருப்பு மத்ததை எரிக்கறதோடு நிக்கல்லே. தன்னையும் எரிச்சுக்கறது. ஆனால் நெருப்பில்லாமல் உயிர் வாழ முடியாது. உன்னைப் போலும், என்னைப் போலும் இருப்பவர் நெருப்பில்லாமல் காரரிசியில் தோசை. அதுக்கு 1ளகாய்ப் பொடி, நல்லெண்ணெய், கொஸ்து, அப்புறம் தயிர் எல்லாம் போட்டுண்டு, காலை நீட்டிண்டு. நன்னாயிருக்கு, நன்னாயிருக்குன்னோ இல்லாட்டா நன்னாபில்லே நன்னாவே யில்லேன்னோ முறிச்சுப் போட்டுண்டிருக்க முடியாது. ‘என்ன சொல்றயோடியம்மா, இட்டிலி தோசை என்கிறே ஆனால் ஒண்னுமே புரியல்லே. 'என் நோக்கமும் அதுதான் வீடுகுரல்கள் ஒய்ந்து விட்டன. என் கால்கள் பூமியில் பதிந்திருந்தன. அருவியில் ஜனத்திரள் கும்மாளம் கொக்களிப்பு. கேக்கே வெளிச்சங்கள் வந்து விட்டன. இரவு பகலானாற்போல். "நீங்கள் ஸ்னானம் பண்ணவில்லையா? ஏதோ ஒன்று பேசனும். அவர் தலை, மறுப்பில் பலமாய் அசைந்தது. விழிகள் கரை உடைந்தன. அதை மறைக்கவோ, தடுக்கவோ அவர் முற்படவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/22&oldid=870340" இலிருந்து மீள்விக்கப்பட்டது