பக்கம்:மீனோட்டம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தூசி 31 பிறகு என்ன நடந்தது? இதென்ன கேள்வி? அவனுக்கு எரிச்சலாய் வந்தது. :கம்மா என்ன நடக்கும் சினிமாவா, டிராமாவா, ஏதாவது நடந்து கொண்டேயிருக்க?" கல்யாணம் நடக்கவில்லையா? குழந்தை பிறக்க வில்லையா? பெண்டாட்டி காலமாகவில்லையா? இதெல்லாம் நடந்ததில் சேர்த்தியில்லையா? புன்னகையை அவனால் அடக்க முடியவில்லை. ஆமாம் சரி, உனக்கு என்ன நடந்தது?” 'எனக்கும் கல்யாணம் ஆயிற்று- அவன் கண்கள் சட்டென அவள் கழுத்தில் பாய்ந்தன. மற்ற நகைகள் இருந் தனவேயன்றி சரடு இல்லை. (ஆனால் அதனால் என்ன? கல்யாணத்திலும் எத்தனையோ விதங்கள் இல்லையா? ஆயினும் கழுத்தில் எவவளவு இளமை ததும்பிக் கொண்டிருக் கிறது!) ‘எங்கள் கம்பெனி முதலாளியைப் பண்ணிக் கொண்டேன்-’ என்றாள் தொடர்ந்து. - % ஒ?” 'ஆம்” என்றாள் அழுத்தத்துடன். அவள் காரியத்தை அவனிடம் சாதித்தே தீரவேண்டும் போல் எனக்குத் தெரியும் பணத்தின் அருமை, நான்தான் பளிச்சென்று சொல்கிறேனே. எங்கள் பாடெல்லாம் அடிக்கும் வரைதான் அதிர்ஷ்டம். அப்புறம் அதோ கதிதான், என்னைப் பெற்றவர்களையே எனக்குத் தெரியாது. நான் ஒரு அனாதை விடுதியில் வளர்ந்து கொண்டிருந்தேன். நாடகத்திற்கு ஆள் தேடுகையில் எங்கள் முதலாளி என்னை அங்கிருந்து கம்பெனியில் சேர்த்துக் கொண் டார். அதனால் பிழைப்பின் கஷ்டம் என்பது என்ன என்று எனக்குத் தெரியும், பணத்தின் அருமையும் எனக்குத் தெரியும்.-” - - 'இப்பொது என்ன அதனால்?- என்றான், பேச்சை மாற்றும் தினுசில். 'ஒன்றுமில்லை. அவர் என்னைப் பண்ணிக் கொள்ள ஆசைப்பட்டார், நானும் அவரைப் பண்ணிக் கொண்டேன். அவருக்கும் வயசாய் விட்டது காலமும் ஆகிவிட்டது. எல்லா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மீனோட்டம்.pdf/32&oldid=870363" இலிருந்து மீள்விக்கப்பட்டது